இந்தோனேசியாவில் எரிமலை கக்கும் அபாயம்

Read Time:59 Second

vulkan201.gifஇந்தோனேசியாவில் எரிமலை ஒன்று கக்கும் அபாயம் அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து லட்சக்கணக்கானோர் அப்பகுதியிலிருந்து வெளியேறி வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவ் எரிமலை கக்கப்போவதாக அரச அதிகாரிகளால் எச்சரிக்கைகள் விடப்பட்டிருந்தும் சில குடியேற்றவாசிகள் அப்பகுதிகளில் திரும்பவும் சென்று குடியேறியுள்ளனர். இந்த எரிமலை கக்கினால் இதன் பாதிப்புகள் பெருமளவில் ஏற்படலாம் என எரிமலை அவதானிப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் சீற்றம் 90 கி.மீ. வரை பாதிப்புகளை ஏற்படுத்தும் என கருதியே அப்பகுதியிலுள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாகிஸ்தான் பயங்கர குண்டுவெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் பெனாசிர் : பலியானோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு
Next post சட்ட விரோத மதுக்குகை பொலிஸாரினால் முற்றுகை