பெண்ணின் கண்ணில் 20 செ.மீ., நீள புழு

Read Time:1 Minute, 39 Second

கோழிக்கோடு: பெண்ணின் கண்ணுக்குள் சுருண்டு கிடந்த 20 செ.மீ., நீள புழுவை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர். கேரள மாநிலம் பாலாடைச் சேர்ந்தவர் ஆயிஷா. 49 வயதான இவருக்கு ஒரு மாதமாக கண்ணில் வலி இருந்தது. பயங்கர உறுத்தலும் இருந்து கொண்டே இருந்தது. வலியால் துடித்தார். அரசு ஆரம்ப சுகாதார மையத்துக்கு சென்றார். சிகிச்சையில் முன்னேற்றம் இல்லை. பாலாடு திரு இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்த டாக்டர்கள், வலது கண்ணின் வெள்ளைப் பகுதியில் புழு இருந்ததைக் கண்டு பிடித்தனர். அறுவை சிகிச்சை மூலம் புழு வெளியே எடுக்கப்பட்டது. நுõல் அளவு தடிமனுடன் 20 செ.மீ., நீளத்தில் வெள்ளை விழிப் பகுதியில் புழு சுருண்டு கிடந்தது. வெளியே எடுத்த பின்னும் அது சாகவில்லை. பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லுõரிக்கு புழு பாதுகாப்பாக அனுப்பப்பட்டது. கண்ணில் புழு கிடப்பது உலக அளவில் மிகவும் அரிதானது. இது தொடர்பாக மிகக் குறைந்த அறுவை சிகிச்சைகள் தான் நடந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர் .

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post `மிருகம்’ படத்தில் பத்மபிரியா மீண்டும் நடித்தார்
Next post அண்டார்டிகாவில் 10 லட்சம் சதுர கி.மீ.பரப்புக்கு இங்கிலாந்து உரிமை கோருகிறது