ஸ்ரீவைகுண்டம் அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண் கற்பழிப்பு: வேன் டிரைவர் கைது!!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த சிவகளை அருகே உள்ள நயினார்புரத்தை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது19 பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியை சேர்ந்த ஜெயபாலன் மகன் வேன் டிரைவரான சுப்புராஜ் (23) இவரும் ஜெயந்தியும் காதலித்து வந்துள்ளனர்.
அவ்வப்போது சுப்புராஜ் தனது காதலியிடம் நான் உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் ஜெயந்தி கர்ப்பமானார். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்புராஜ் வெளியூர் சென்று விட்டார்.
இந்த நிலையில் ஜெயந்திக்கு பெண் குழந்தை பிறந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுப்புராஜ் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது அவரை சந்தித்த ஜெயந்தி நமக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. என்னை எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? என்று கேட்டுள்ளார்.
அப்போது சுப்புராஜ் காதலியிடம் நான் உன்னை திருமணம் செய்ய முடியாது என்று கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயந்தி ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சுப்புராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.