தைப்பொங்கல் தினத்தன்று புலிகள் தமிழீழப் பிரகடனம் செய்யத் திட்டம்

Read Time:2 Minute, 17 Second

எதிர்வரும் தைப்பொங்கல் நாளில் தமிழீழப் பிரகடனத்தை புலிகள் வெளியிடுவார் என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதுகுறித்து அவர் கூறியதாவது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழழப் பிரகடனத்தைப் வெளியிடத் தீர்மானித்திருக்கின்றனர். முதலில் ஜனவரி 18ஆம் திகதி பிரகடனம் வெளியிடப்படவிருந்தது. என்று கூறியிருந்தேன். ஆனால், எமக்குத் தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி 14ஆம் திகதி தைப்பொங்கல் நாளன்றே தமிழீழப் பிரகடனத்தை செய்ய விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை பிரபாகரன் எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் நாள் தனது மாவீரர் நாள் உரையில் வெளியிடுவார் புலிகளின் இந்தத்திட்டம் குறித்து இந்தியாவும், அனைத்து நாடுகளும் கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றன. புலிகளின் இந்தத் திட்டத்திற்கு அனைத்துலக நாடுகள் அனுமதிக்காது அதற்கான உறுதிமொழிகளை அந்த நாடுகள் எமக்கு வழங்கியுள்ளன இலங்கை அரசும் இதனை அனுமதிக்கப் போவதில்லை அமெரிக்க ஜனாதிபதியிடமும், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரிடமும் தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு புலிகள் கோரிக்கை விடவுள்ளனர். இத்தகைய மின்னஞ்சல்களை அவர்களுக்கு அனுப்புமாறு புலிகள் அறிவித்துள்ளனர். இதற்கான முயற்சி ஒன்று எற்கனவே, புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. எனினும், அந்த முயற்சி கைகூடவில்லை. இப்போது மீண்டும் இந்த முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அண்டார்டிகாவில் 10 லட்சம் சதுர கி.மீ.பரப்புக்கு இங்கிலாந்து உரிமை கோருகிறது
Next post ஜெர்மனியில் ரெயில் என்ஜின் டிரைவர்கள் வேலைநிறுத்தம்