துப்பாக்கி முனையில் அ.தி.மு.க. செயலாளரை கடத்தி ரூ.3 லட்சம் பறிப்பு

Read Time:3 Minute, 23 Second

4959822.gifகும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது57) அ.தி.மு.க. கிளை செயலாளராக இருக்கிறார். கண்ணன் கிழங்கு வியா பாரம் செய்து வருகிறார். அந்தப்பகுதியில் கிழங்கு வகைகளை கொள்முதல் செய்து கோயம்பேடு மொத்த வியாபாரிகளுக்கு சப்ளை செய்வார். இதனால் அவரிடம் எப்போதும் பணப்புழக்கம் இருக்கும். கண்ணன் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
அப் போது ஒரு கார் வேகமாக வந்து அவரை வழிமறித்து நின்றது. அதில் 8 பேர்கொண்ட கும்பல் இருந்தது. அவர்கள் கண்ணனை காருக் குள் குண்டு கட்டாக தூக்கிப் போட்டனர். எங்களுக்கு ரூ.3 லட்சம் பணம் வேண்டும் என்று துப்பாக்கிமுனையில் மிரட்டினார்கள். இதனால் பயந்து போன கண்ணன் தன்னிடம் பணம் இல்லை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினார். உன்னிடம் பணம் இல்லை என்றால் கோயம்பேடு வியா பாரியிடம் வாங்கி கொடு என்று மிரட் டினார்கள். கார் சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்தது. வேறுவழியின்றி கண்ணன் கோயம்பேடு வியாபாரி பிர பாகரனுடன் செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு அவசரமாக ரூ.3 லட்சம் தேவை என்றார். பிரபாகரன் வெளியில் இருந்ததால் மனை வியிடம் சொல்கிறேன் போய் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார். கார் கோயம்பேடு வந்ததும் கண்ணனும் கடத்தல்காரன் ஒருவனும் பிரபாகர் வீட்டுக்கு சென்றனர். அங்கு கண்ணன் ரூ.3லட்சம் பணத்தை வாங்கி அதை கடத்தல்காரர்களிடம் கொடுத்தார். உடனே கடத்தல்கும்பல் கண் ணனை சென்னையிலேயே இறக்கிவிட்டு விட்டு பணத் துடன் தாங்கள் வந்த காரில் தப்பிச்சென்று விட்டனர். பின்னர் அவர் பஸ் பிடித்து ஆரம்பாக்கம் வந்து போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. அப் துல்அஜீஸ், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தினர். கடத்தல்காரர்கள் 8பேரும் கண்ணனிடம் பணப்புழக்கம் இருப்பதை அறிந்து இந்த செயலில் ஈடுபட்டார்களாப அல்லது கொடுக்கல் வாங்கல் தகராறில் கூலிப்படையை ஏவி பணம் பறித்தனராப என்பது மர்மமாக இருக்கிறது. காருடன் 8பேரும் சென்னையில் பதுங்கி இருக்கலாம் என்று கருதி தனிப்படை போலீசார் சென்னைக்கு விரைந்துள்ளனர். கடத்தல் காரர்கள் பற்றி கண்ணனிடமும், கிழங்கு வியாபாரிகளிடமும் போலீசார் விசாரணை நடத்து கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கன்னட பிரசாத் காதலி நடிகை குசும் விபசார வழக்கில் கைது
Next post கனடாவில் தீ விபத்து புரளி: நடிகர் விஜயகாந்த் ஓட்டலை விட்டு வெளியே ஓடிவந்தார், 3 மணி நேரம் தவிப்பு