ஈராக்கில் பெண்ணை கற்பழித்து கொலை செய்த அமெரிக்க வீரர்
அமெரிக்காவில் பணியாற்றி புகார் காரணமாக வெளியேற்றப்பட்டவர் ஸ்டீவன் கிரீன்.இவர் ஈராக்கில் பணியாற்றியபோது ஈராக்கியப் பெண்ணை ரோட்டில் பார்த்துவிட்டு அவர் வீட்டுக்கு சென்றார். அங்கு இருந்த அந்தப் பெண்ணின் பெற்றோரையும் மகளையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பிறகு அந்தப் பெண்ணை கற்பழித்தார். பிறகு அந்தப்பெண்ணையும் சுட்டுக்கொன்றார்.
இது ஈராக்கில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவர் ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. குற்றச்சாட்டு நிருபனமானால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படும்.