கடன் ரத்து செய்யப்படாததால் ஆந்திராவில் ஒரே நாளில் 2 விவசாயி தற்கொலை!!

Read Time:1 Minute, 36 Second

4263aa5a-432c-4678-b96d-c1f0c2d2a029_S_secvpfகுண்டூர் மாவட்டம் பண்டிரெட்டி திவாரி பாளையத்தைச் சேர்ந்தவர் புச்சிரெட்டி (வயது 65). இவர் பிடுகராலா ரெயில் நிலையம் அருகே ரெயில் வரும்போது தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது பிணம் அருகே கிடந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் ‘‘விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதாக அரசு அறிவித்தது. அதனை நம்பி நான் வட்டி கட்டாமல் இருந்தேன். ஆனால் கடன் தள்ளுபடி செய்யாததால் வட்டி மேல் வட்டி போட்டு எனது கடன் தொகை அதிகமாகி விட்டது. வெளியில் வாங்கிய விவசாய கடனையும் என்னால் அடைக்க முடியவில்லை. இதனால் தற்கொலை செய்கிறேன்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதேபோல் அனந்தபுரம் மாவட்டம் கதிரிபள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜப்பா (35). என்ற விவசாயி புளிய மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விவசாயத்தில் ஏற்பட்ட கடன் காரணமாக எனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி வீரலட்சுமி கூறினார்.

ஒரே நாளில் 2 விவசாயிகள் தற்கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புர்ஜ் கலிபாவில் லேசர் ஒளி வெள்ளத்தில் இசைக்கேற்ப நடனமாடும் அழகிய நீரூற்று: வீடியோ இணைப்பு!!
Next post வறுமையின் கொடுமையால் ரூ.10 ஆயிரத்துக்கு ஆண் குழந்தையை விற்க முயன்ற வட மாநில வாலிபர்!!