பெண் கொலை: என் கணவருடன் உல்லாசம் அனுபவித்ததால் தீர்த்து கட்டினேன்- கைதான தோழி வாக்குமூலம்!!

Read Time:5 Minute, 13 Second

a0d51149-a627-4c0c-97ff-120b011ed0f3_S_secvpfதிருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி கலைவாணி (வயது 30). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோல்டன் நகர் பகுதியில் டிரம்மில் பிணமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கலைவாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கலைவாணியின் தோழி மீனா மற்றும் அவரது நண்பர் ராஜபாண்டியன் ஆகியோரை கைது செய்தனர்.

கைதான மீனாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–

நான் திருப்பூருக்கு வேலைக்கு செல்லும் போது பஸ்சில் எனக்கு கலைவாணி பழக்கம் ஆனார். நாளடைவில் அவர் எனது நெருங்கிய தோழி ஆனார். அடிக்கடி போனில் பேசி எங்களது நட்பை வளர்த்து வந்தோம். இந்த நிலையில் வீரபாண்டி பகுதியில் கலைவாணி வீட்டுக்கு அருகே காலியாக வாடகைக்கு வீடு இருப்பதாக கூறி என்னை அழைத்தார்.

நான் வேலைக்கு செல்ல உதவியாக இருக்கும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீரபாண்டியில் உள்ள கலைவாணியின் வீட்டுக்கு அருகில் குடி பெயர்ந்தேன். அதன்பின்னர் என் வீட்டுக்கு கலைவாணி அடிக்கடி வந்தார். இதில் என் கணவருடன் அவர் பழகினார். ஆரம்பத்தில் நான் நட்பாக பழகுகிறார்கள் என்று எண்ணி சகஜமாக விட்டு விட்டேன்.

இந்த நிலையில் ஒருநாள் நான் வீட்டில் இல்லாத போது கலைவாணி என் கணவருடன் என் வீட்டில் உல்லாசம் அனுபவித்தார். அப்போது அங்கு சென்ற நான் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தேன். கலைவாணியிடம் என் கணவருடனான கள்ளத்தொடர்பை விட்டு விடும்படி எச்சரித்தேன். என் கணவரிடமும் இதுகுறித்து விளக்கம் கேட்டேன்.

ஆனால் கலைவாணி என் கணவருடனான கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. நான் வீட்டில் இல்லாத சமயத்தில் பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதனால் என் கணவரை கலைவாணி அபகரித்து விடுவாரோ? என்று எண்ணி பயந்தேன்.

இதுகுறித்து என் நண்பர் ராஜபாண்டியிடம் தெரிவித்தேன். பின்னர் கலைவாணியை கொலை செய்ய நாங்கள் திட்டமிட்டோம். அதன்படி சம்பவத்தன்று என் வீட்டுக்கு கலைவாணி அழைத்தேன். அவரும் வந்து என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது நாங்கள் திட்டமிட்டப்படி வீட்டுக்குள் மறைந்திருந்த ராஜபாண்டி பெரிய உருட்டுக்கட்டையால் கலைவாணியின் பின் பக்கமாக வந்து அவரது தலையில் பயங்கரமாக தாக்கினார். இதில் நிலைகுலைந்த கலைவாணி கீழே விழுந்தார். அவரை நான் துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் ஏற்கனவே நாங்கள் வாங்கி வைத்திருந்த பிளாஸ்டிக் கவரில் கலைவாணியின் உடலை சுற்றினோம். பின்னர் வீட்டில் இருந்த தண்ணீர் டிரம்மில் அடைத்தோம். உடலை அப்புறப்படுத்த திட்டமிட்டு ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு போன் செய்து அரிசி டிரம்மை கோல்டன் நகரில் உள்ள ஒரு கடைக்கு வினியோகிக்க வேண்டும் என்று அழைத்தோம்.

அதை உண்மை என நம்பி வந்த ஆட்டோவில் கலைவாணி உடல் இருந்த டிரம்மை ஏற்றி சென்றோம். கோல்டன் நகரில் உள்ள ஒரு கடையின் முன்பு அதை இறக்கி வைத்து விட்டு ஆட்டோ டிரைவரை திருப்பி அனுப்பி விட்டோம். பின்னர் அந்த டிரம்மை அங்கேயே வைத்து விட்டு நாங்கள் இருவரும் தேனிக்கு தப்பி சென்று விட்டோம். ஆனால் போலீசார் எங்களை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் போலீசில் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேர்தல் வேலை செய்த பெண் பற்றி அவதூறான தகவல்: குமார் விஸ்வாசுக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்!!
Next post தென்காசி அருகே கல்லூரி மாணவி மர்மச்சாவு!!