புகைப்படத்தை வைத்து பாலினம் மற்றும் வயதை கூறும் மைக்ரோசாப்ட் வலைதளம்: வேடிக்கையாக மாறிய கணிப்புகள்!!

Read Time:2 Minute, 39 Second

739c81e0-60d5-4542-9bbf-f13da88ba4e9_S_secvpf326 வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களின் முகம் முதிர்ச்சியான தோற்றத்தில் இருந்தால் குழந்தைகள் அங்கிள் மற்றும் ஆண்ட்டி என்று அழைப்பது இயல்பு.

இவ்வாறு முகத்தை வைத்து வயதானவர்கள் என்று குழந்தைகள் அடையாளம் கண்டுகொள்வது போல, புதிய இணைய தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். புகைப்படத்தை கொண்டு பாலினம் மற்றும் வயதை கணிக்கும் இந்த வலைதளம் பற்றிய தகவல் தற்போது வைரஸாக பரவி வருகிறது. அந்த வகையில் பாலிவுட் பிரபலம் அமிதாப் மற்றும் அவரின் குடும்பத்தாரின் பாலினம் மற்றும் வயது பற்றிய கணிப்புகள் நகைப்பை வரவழைத்துள்ளது.

அமிதாப் மற்றும் அபிஷேக்கை ஆண் என்றும், ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய், ஸ்வேதா நந்தாவை பெண் என்றும் சரியாக கணித்த இணைய தளம், ஐந்து பேரின் வயதில் சொதப்பிவிட்டது. அமிதாப்பின் உண்மையான வயது 72 ஆக உள்ள நிலையில் அவரது வயதை 49 ஆகவும், 67 வயதாகும் ஜெயாபச்சனின் வயதை 38 வயதாகவும் கணித்துள்ளது. அதே சமயம் 39 வயதாகும் அபிஷேக் பச்சனின் வயதை 43 என்றும், 41 வயதாகும் ஐஸ்வர்யா ராயின் வயதை 33 ஆகவும், ஸ்வேதா நந்தாவின் வயதை 40 ஆக கணித்துள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் அமிதாப், ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய், ஸ்வேதா ஆகியோரின் வயதை குறைத்து மதிப்பிட்ட மைக்ரோசாப்ட் இணையதளம், அபிஷேக்கின் வயதை அதிகமாக மதிப்பிட்டுள்ளது. இதைவிட மிகப்பெரிய வேடிக்கை ஸ்வேதா மற்றும் ஐஸ்வர்யாவை விட வயதில் குறைந்த அபிஷேக்கை, அதிக வயதுடையவராக மதிப்பிட்டுள்ளது.

அதே போல் தற்போது 64 வயதை எட்டியுள்ள பிரதமர் மோடியின் வயது 59 ஆக கணிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த புதிய முயற்சியில் வேடிக்கையாக பலரும் தங்கள் புகைப்படத்தை கொண்டு பாலினம் மற்றும் வயதை அறிந்துகொள்ள ஆர்வத்துடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனிதரில் இத்தனை நல்லவர்களா?: பொருட்கள் திருடப்பட்டு தனியாக தவித்தவரின் நாளை, மிகச்சிறந்த நாளாக மாற்றிய மாமனிதர்கள்!!
Next post மாப்பிள்ளை குடித்துவிட்டு வந்ததால் திருமணத்தை மறுத்த பெண்: சத்தீஸ்கரின் பெண்கள் மேம்பாட்டுக்கான தூதுவர் ஆனார்!!