பதவி ஏற்பு உறுதிமொழியின்போது சொல்லப்படும் ஈஸ்வரர் என்பவர் யார்? தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் திடுக் கேள்வி!!

Read Time:2 Minute, 21 Second

a9752442-f7ec-4b35-8e72-2fbd845e8952_S_secvpfஎம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு உறுதிமொழியும் ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொள்ளும்போது, ‘‘ஈஸ்வரர்’’ பெயரால் உறுதிமொழி ஏற்பதாக சொல்வார்கள்.

இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து, மக்கள் பிரதிநிதிகள் இப்படி உறுதிமொழி ஏற்பது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் சிரத்தானந்த் யோகாச்சார்யா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தி இரு கேள்விகளை எழுப்பியுள்ளார். ‘‘எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஈஸ்வரர் பெயரால் உறுதி ஏற்பதாக கூறுகிறார்களே…. அந்த ஈஸ்வரர் என்பவர் யார்?’’ என்பது அவரது முதல் கேள்வியாகும்.

‘‘சத்யமேவ ஜெயதே’’ என்று தேசிய சின்னங்களில் எழுதப்படுகிறதே அதற்கு உண்மையான அர்த்தம் என்ன?’’ என்பது அவரது இரண்டாவது கேள்வியாகும். இந்த இரு கேள்விகளையும் அவர் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பினார்.

யோகாச்சார்யாவின் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்தை ஜனாதிபதி மாளிகை அலுவலகம் கேட்டுக் கொண்டது. உள்துறை அமைச்சகமோ, ‘‘இது எங்கள் எல்லைக்குள் வராது’’ என்று கூற இரு கேள்விகளையும் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது.

ஆனால் ‘‘ஈஸ்வரர்’’ என்பவர் யார்? என்பதற்கு மத்திய சட்ட அமைச்சகத்தால் இதுவரை பதில் சொல்ல முடியவில்லை. கேள்வி கேட்ட யோகாச்சார்யாவை சட்ட அமைச்சக அதிகாரிகள் சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

இதுபற்றி சட்ட அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி தேவை இல்லாமல் எங்கள் நேரம் வீணாக்கப்படுகிறது’’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புரூஸ் லீயைப் போல் அச்சு அசலாக நுன்சாக்கு சுழற்றி அசத்தும் 5 வயது சிறுவன்: வீடியோ இணைப்பு!!
Next post வியாபாரியிடம் ரூ.27½ லட்சம் கொள்ளையடித்த ஆந்திர போலீசார் 3 பேர் கைது!!