பசுவின் கோமியத்தை கிருமி நாசினியாக பயன்படுத்த ராஜஸ்தான் அரசு அசத்தல் முடிவு!!

Read Time:2 Minute, 31 Second

414c88c0-ad96-42c6-86e0-19200862cee3_S_secvpfபசுவின் கோமியம் கிருமி நாசி என்பது கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு ஏற்கனவே தெரிந்தது தான். இதனால் தான் ஒவ்வொரு விரத நாட்களிலும் வீட்டிற்குள் கோமியம் தெளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இன்றும் கூட தமிழகத்தின் பல மாவட்டங்களில் வாரத்திற்கு இரு முறையாவது கோமியம் தெளிப்பதை காணலாம்.

இப்படி அருமையான மருத்துவ குணம் கொண்ட கோமியத்தை பயன்படுத்த ராஜஸ்தான் அரசு அசத்தல் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது. அதன்படி அம்மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் மற்ற கிருமி நாசினிகளுக்கு பதிலாக கோமியத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் சோதனை முயற்சியாக ஜெய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையான சவாய் மான்சிங் மருத்துவமனையில் உள்ள ஒரு வார்டில் மட்டும் மற்ற கிருமி நாசினிகளுக்கு பதிலாக கோமியம் பயன்படுத்தப்பட உள்ளது.

தினந்தோறும் இவ்வாறு உபயோகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்துக்கு பின் கோமியத்துக்கும், மற்ற கிருமி நாசிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை மருத்துவர்கள் அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள். அந்த அறிக்கை முடிவுகளின் படி மற்ற மருத்துவமனைகளும் கோமியத்தை கிருமி நாசினியாக பயன்படுத்த அறிவிப்பாணை வெளியிடப்படும் என தெரிகிறது.

ஆனால் கோசாலையில் உள்ளவர்களோ, இது ஒன்றும் புதிய விஷயமில்லை. ஏற்கனவே நாங்கள் சிறுநீரகத்தை சீராக வைத்துக்கொள்ள கோமியத்தை மருந்தாக வழங்கி வருகிறோம். ஏன் கண்களுக்கு சொட்டு மருந்தாக கூட பயன்படுத்தி வருகிறோம். கோமியத்தின் அருமை இப்போது தான் அரசுக்கு புரிந்துள்ளது போலும் என அவர்கள் நகைப்பை வெளிப்படுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆதிவாசி மக்களின் நலனுக்காகவே போராட்டம் நடத்தினார்கள்: கைதான மாவோயிஸ்டு தம்பதியின் மகள் பேட்டி!!
Next post இதுவல்லவா தொழில்நுட்ப புரட்சி?: வாட்ஸ்-அப் மூலம் வேலையை ராஜினாமா செய்த சப்-இன்ஸ்பெக்டர்!!