பெனாசிரின் அரசியல் வாழ்வின் முக்கிய திருப்பங்கள்

Read Time:6 Minute, 19 Second

pakbenazir_butto.jpg1979 ஏப்ரல் 4 : பெனாசிர் பூட்டோவின் தந்தையும் முன்னாள் பிரதமருமான ஷுல்பிகார் அலி பூட்டோவுக்கு அப்போதைய இராணுவ சர்வாதிகாரியான ஸியா -உல் – ஹக்கினால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மூன்று வருட சிறைவாழ்க்கையின் பின்னர் பெனாசிர் பூட்டோ 1984 இல் பிரிட்டனுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
1986 ஏப்ரல் : பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பி.பி.பி) தலைமைப் பதவியை ஏற்பதற்காக நாடு திரும்பிய பூட்டோ மில்லியன் கணக்கான மக்களின் அமோக ஆதரவைப் பெற்றார்.
1988 நவம்பர் 16 : சர்வாதிகாரி ஸியா – உல் – ஹக் விமான விபத்தில் பலியான பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தலில் பெனாசிரின் பி.பி.பி. கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 1988 டிசெம்பர் 2 ஆம் திகதி பாகிஸ்தானின் முதலாவது பெண் பிரதமராக பெனாசிர் பதவியேற்றார்.
1990 ஆகஸ்ட் : ஊழல் மற்றும் ஒழுங்கற்ற ஆட்சி என்ற குற்றச்சாட்டின் பேரில் ஜனாதிபதி ஹுலம் இஸாக் ஹானால் பெனாசிர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பெனாசிரின் கணவரான ஆஸிப் ஷர்டாறி கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

1990 அக்டோபர் : தேர்தலில் தோல்வியைத் தழுவிய பெனாசிரின் கட்சி நவாஸ் ஷெரீப் பிரதமராக பதவி வகித்த 3 வருட காலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கியது.

1993 அக்டோபர் : பி.பி.பி. கட்சி மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியதுடன் இரண்டாவது தடவையாக பெனாசிர் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

1996 அக்டோபர் : அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் ஜனாதிபதி பலூக் அஹமட் லெஹாரியினால் பெனாசிர் மீண்டும் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

1999 ஏப்ரல் : 1993 – 1996 வரையான பெனாசிரின் ஆட்சியில் பெருமளவான நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெனாசிரையும் அவரது கணவர் ஷர்டாரியையும் பாகிஸ்தான் நீதிமன்றம் குற்றவாளிகளாக தீர்மானித்தது.

2002 தேர்தலில் போட்டியிடுவது என்ற சபதத்துடன் பெனாசிர் சுயமாக நாட்டை விட்டு வெளியேறி லண்டன் மற்றும் டுபாயில் தஞ்சம் புகுந்தார்.

1999 அக்டோபர் 12 : இராணுவத் தலைமைப் பதவியிலிருந்து முஷாரப்பை நீக்குவதற்கு நவாஸ் முயற்சி செய்ததை தொடர்ந்து நவாஸ் ஷெரீப் முஷாரப்பினால் பதவி கவிழ்க்கப்பட்டார்.

2002 ஜூலை : பெனாசிர் மற்றும் ஷெரீப்பை இலக்கு வைத்து மூன்றாவது தடவையாகவும் பிரதமர் பதவியை வகிப்பதற்கு முஷாரப்பினால் தடை விதிக்கப்பட்டது.

2002 அக்டோபர் 10 : நாடு திரும்பினால் கைது செய்யப்படுவார் என்ற எச்சரிக்கைக்கு மத்தியில் பெனாசிர் இன்றி நாடு பூராவும் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பி.பி.பி.கட்சி 342 பாராளுமன்ற ஆசனங்களில் 80 ஆசனங்களை வென்றது.

2003 ஜூலை : சுவிஸ் வங்கியினூடாக 12 மில்லியன் டொலர் நிதியில் மோசடியில் ஈடுபட்டதாக பெனாசிர் மற்றும் ஷர்டாரியார் மீது சுவிஸ் நீதிமன்றம் குற்றஞ் சுமத்தியது. இதில் 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதும் மேன்முறையீட்டையடுத்து இத் தண்டனை இரத்து செய்யப்பட்டது.

2004 நவம்பர் : சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஷர்டாரி வெளிநாட்டில் பெனாசிருடன் இணைந்தார்.

2006 ஜனவரி : பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கமைய, பூட்டோ மற்றும் ஷர்டாரியை கைது செய்வதற்கு இன்டர்போல் சர்வதேச அறிவிப்பை வெளியிட்டது.

2007 செப்டெம்பர் : அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையை ஏற்படுத்துவது தொடர்பில் முஷாரப் மற்றும் பெனசிரின் உதவியாளர்களுக்கிடையில் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டது.

2007 செப்டெம்பர் 14 : அக்டோபர் 18 இல் நாடு திரும்பவுள்ளதாக பெனாசிர் அறிவித்தார்.

2007 அக்டோபர் 4 : தேசிய நல்லிணக்க உடன்பாடொன்றுக்கு பெனாசிரும் முஷாரப்பும் இணங்கினர். பூட்டோவின் வழக்குகளை இரத்து செய்வதற்கான உடன்படிக்கையில் முஷாரப் கைச்சாத்திட்டார்.

2007 அக்டோபர் 6 : ஜனாதிபதி தேர்தலில் முஷாரப் வெற்றிபெற்றார்.

அக்டோபர் 13 : முஷாரப்பின் வெற்றி குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் வரை பெனாசிர் நாடு திரும்புவதை பிற்போடுமாறு முஷாரப் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

2007 அக்டோபர் 17 : டுபாயில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பெனாசிர் நாடு திரும்புவதை உறுதிப்படுத்தினார்.

pakbenazir_butto.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இலங்கைக்கு இந்தியா ஓசைப்படாமல் ராணுவ உதவி!
Next post காதல் திருமணம்: மகளுக்கு நடிகர் சிரஞ்சீவி உருக்கமான அழைப்பு- “உன் மகிழ்ச்சியே முக்கியம், கணவருடன் வீட்டுக்கு வா”