கந்தசாமியில் பெண் வேடமிட்டு ‘சிலிர்க்க’ வைத்த சீயான்!

Read Time:2 Minute, 35 Second

indvikram-kandasamy.jpgகந்தசாமியில் பெண் வேடமிட்டு ஜிலுஜிலுவென விக்ரம் காட்டும் கவர்ச்சியைப் பார்த்து நாயகி ஷ்ரியாவே அரண்டு போயுள்ளாராம். வித்தியாச கெட்டப்களில் நடித்துக் கலக்கி வரும் விக்ரம், ஐந்து விதமான வேடங்களில் நடித்து வரும் படம் கந்தசாமி. அதில் ஒன்று பெண் வேடம். பெண் வேடத்தில் விக்ரம் சொக்க வைத்து வருகிறாராம். கூட நடிக்கும் ஷ்ரியாவே பார்த்து பயந்து போகும் அளவுக்கு கிளாமரும் காட்டி கிளுகிளுக்க வைத்துள்ளாராம் விக்ரம். கலைப்புலி தாணுவின் பிரமாண்டத் தயாரிப்பில் உருவாகும் கந்தசாமி படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. பெண் வேடமிட்டு வெளுத்துக் கட்டி வரும் விக்ரம், கிளாமரையும் கலந்து கட்டி யூனிட்டாரை வாய் பிளக்க வைத்துள்ளார். அதிலும் நாயகி ஷ்ரியாவுக்கே விக்ரமின் கவர்ச்சி கிடுகிடுக்க வைத்துள்ளதாம். ஷ்ரியாவை விட சீயானின் கிளாமர் சிலுசிலுப்பாக இருப்பதால் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷ்ரியாவைப் பார்த்து ஜொள்ளு விட்டவர்கள் கூட இப்ேபாது விக்ரமைப் பார்த்து ஜொள்ளு விட ஆரம்பித்துள்ளனராம்.

விட்டால், விக்ரம் ஸ்கோர் பண்ணி விடுவாரோ என்று அரண்டு போன ஷ்ரியா, எனக்கும் கவர்ச்சி கூட்டிக் கொடுங்க என்று இயக்குநர் சுசி.கணேசனிடம் சொல்லும் அளவுக்கு சீயானின் கிளாமர் அசத்தலாக உள்ளதாம்.

ஷ்ரியாவைப் பற்றிய ஒரு கொசுறுச் செய்தி. கல்யாணம் செய்து கொண்டால் நிச்சயம் சினிமாக்காரர் ஒருவரைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக கூறுகிறாராம் ஷ்ரியா. கவர்ச்சியில் மட்டுமல்ல பேச்சிலும் கூட வெளிப்படையாக இருக்கிறார் ஷ்ரியா.

indvikram-kandasamy.jpg
indvikram-shreya.JPG
indshriya_8.jpg
indshriya_7.jpg
indshriya16.jpg
indshriya17.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவை கொல்ல காது குடையும் பஞ்சு குச்சியுடன் வந்த மனித வெடிகுண்டு!
Next post இலங்கைக்கு தரங்குறைந்த ஆயுதங்களை விற்பனை செய்ய பாகிஸ்தான் தீவிர முயற்சி