கல்லூரி மாணவர் கொலை: 7 பேருக்கு ஆயுள் தண்டனை-சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது!!

Read Time:2 Minute, 14 Second

ddebb70d-f033-4fa7-ba6a-ca97e3723040_S_secvpfஉத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தேவ் கல்லூரியில் முதுகலை படித்து வந்தவர் அலோக் சந்தனா. இவரது நண்பர் விபின் சிங்.

இருவரும் கல்லூரி தேர்தலில் போட்டியிட்டனர். கல்லூரி தேர்தலில் இருந்து வாபஸ் பெறுமாறு ஒரு கும்பல் இவர்களை மிரட்டியது. ஆனால், அவர்கள் அதை ஏற்க மறுத்து விட்டனர்.

இதனால் கல்லூரி வளாகத்தில் வைத்து அந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் அவர்களை தாக்கியது. இருவரையும் மாணவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பலத்த காயம் அடைந்த அலோக் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். 1996–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்தது.

விபின் அளித்த புகாரின் பேரில் தீரஜ், கல்ரா, ரிஷிகுமார், சாம்பிரகாஷ், சவுரப், நிதின், பகத்சிங் சஞ்சீவ்குமார் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

கொலை, சட்டவிரோதமாக கூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்களை குற்றவாளி என்று அறிவித்து விசாரணை கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.

இதை தொடர்ந்து 7 பேரும் உத்தரகாண்ட் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தது. உத்தரகாண்ட் ஐகோர்ட்டும் 2011–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

இதை தொடர்ந்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். பி.சி.கோஷ், ஆர்.கே.அகர்வால் அடங்கிய பெஞ்ச் 7 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.

மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. கொலைக்கு பொதுவான நோக்கம் இல்லை என்று மனுதாரர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ள இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடி வயிற்றைக் கலக்கும் சாகச வீடியோ: கற்பனைக்கும் எட்டாத வானுயர கட்டிடத்தில் சர்க்கஸ்!!
Next post குடிபோதையில் 10 மாத குழந்தையை கொல்ல முயன்ற தந்தை!!