அமெரிக்காவுக்கு அடுத்து ஐதராபாத்தில் மிகப்பெரிய வளாகத்தை அமைக்கும் கூகுள்!!

Read Time:1 Minute, 28 Second

8d9a1e9e-6063-41ca-865c-b4c1bea84eb2_S_secvpfஅமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தெலுங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராமா ராவ், கூகுள் நிறுவனம் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 1000 கோடி ரூபாய் முதலீட்டில் தனது மிகப்பெரிய வளாகத்தை ஐதராபாத்தில் திறக்க இருப்பதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

“கூகுள் தனது மிகப்பெரிய வளாகத்தைக் ஐதராபாத்தில் கட்டும் வகையில் கூகுள் மற்றும் தெலுங்கானா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

அமெரிக்க பல்கலைகழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை படித்துள்ள 38 வயதான ராமா ராவ், தெலுங்கானாவின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உட்பட பலரையும் சந்தித்து ஐதராபாத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவை உருவாக்குவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேஸ்புக்கின் புதிய தேடலால் கூகுலுக்கு ஆபத்து?
Next post டெல்லியில் 3 பெண்கள் மீது காரை ஏற்றிய சப்-இன்ஸ்பெக்டர் கைது!