கேமரூன் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி. பிரீத்தி மந்திரி ஆகிறார்!!

Read Time:1 Minute, 43 Second

934164bd-82e0-4624-b5f3-c75ab9bad944_S_secvpfஇங்கிலாந்தில் கடந்த 7–ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பிரதமர் டேவிட் கேமரூனின் கன்சர்வேடிவ் கட்சி 336 தொகுதிகளில் தனி மெஜாரிட்டியுடன் அமோக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து கேமரூன் மீண்டும் பிரதமராகிறார்.
அவர் விரைவில் ஆட்சி அமைக்கிறார். அதற்காக புதிய மந்திரி சபை தேர்வு செய்து வருகிறார். ஏற்கனவே முக்கிய துறைகளுக்கான 4 மந்திரி சபை நியமித்துள்ளார்.

தற்போது மேலும் ஒரு பெண் எம்.பி.யை மந்திரி பதவிக்கு தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளார். அவரது பெயர் பிரீத்தி படேல். 43 வயதான அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவருக்கு வேலை வாய்ப்பு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இவர் எஸ்சக்ஸ் பகுதியில் உள்ள வித்தாம் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு தனது மந்திரி சபையில் டேவிட் கேமரூன் கேபினட் அந்தஸ்து வழங்கியுள்ளார்.

புதிதாக அமைய இருக்கும் மந்திரி சபையில் பெண்களை அதிகஅளவில் நியமித்து வருகிறார். இதன் மூலம் பழைய நடைமுறையான ஆண் ஆதிக்கத்தை மாற்றி பதுமையை புகுத்த அவர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவள்ளூர் அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை!!
Next post காரியாபட்டியில் ரோட்டில் நடந்து சென்ற பெண் வெட்டிக்கொலை: கணவர் போலீசில் சரண்!!