ரத்த புற்றுநோய் தாக்கிய சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.!!

Read Time:1 Minute, 56 Second

26e7e9c6-334b-4a04-8c4d-fd829a129ff3_S_secvpfஆந்திர மாநிலம் வரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவாஜி. இவரது மகள் ஸ்ரீநிதி (11). 6–ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி ஸ்ரீநிதிக்கு இடுப்பு வலி ஏற்பட்டது. ஐதராபாத் கூகட் பள்ளியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அவரை பரிசோதித்தனர். அப்போது அவருக்கு ரத்தபுற்று நோய் இருப்பது தெரிய வந்தது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஸ்ரீநிதி நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தீவிர ரசிகை. அவரை பார்க்க வேண்டும் என்று தனது விருப்பத்தை ஸ்ரீநிதி தெரிவித்தார். சிறுமியின் ஆசையை ஆஸ்பத்திரி நிர்வாகி பேஸ்புக்கில் வெளியிட்டது. இதனை பார்த்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். சிறுமியின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தார். நேற்று அவர் ஆஸ்பத்திரிக்கு வந்தார். ஸ்ரீநிதிக்கு பெரிய கரடி பொம்மையை பரிசாக வழங்கினார்.

மேலும் சாக்லேட், இனிப்புகளை வழங்கினார். ஸ்ரீநிதியுடன் சுமார் 30 நிமிடம் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். அவருக்கு பிடித்த தனது படங்கள், பாடல்கள், நடிப்பு போன்றவைகளை அவர் கேட்டு தெரிந்து கொண்டார். இதுகுறித்து ஜூனியர் என்.டி.ஆர். நிருபர்களிடம் கூறும் போது, ‘‘சிறுமிக்கு தேவையான உதவியை செய்வேன்’’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீயும் நானும் நிலவும் வானும் (திரைவிமர்சனம்)!!
Next post போலீஸ் நிலையத்தில் தகராறு: துப்பாக்கி சண்டையில் 2 போலீசார் பலி!!