அமெரிக்காவில் படிக்க மும்பை மாணவிக்கு 2 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகை: இன்னொரு ஆசையும் நிறைவேறுமா?

Read Time:1 Minute, 36 Second

f5930fc4-bd24-4dd6-b63b-ff9abd8cdb44_S_secvpfமும்பையின் புறநகர் பகுதியான ஜூஹூவில் உள்ள ஜம்னாபாய் நர்சி பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த பெண் பவி ஜகாதியா. இவருக்கு நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைகழகத்தில் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படிப்பதற்காக 2 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகை கிடைத்துள்ளது.

இது குறித்து பவி கூறுகையில், “12-ம் வகுப்பில் கணிதத்தேர்வு எழுதுவதற்கு முதல் நாள்தான், டாடா நிறுவனம் வழங்கும் இந்த உதவித்தொகை எனக்கு கிடைத்திருப்பது தெரியும். அந்த நொடி முதல் நான் சந்தோஷத்தில் மிதக்கிறேன்” என்றார்.

பவியின் பெற்றோர்களோ, குழந்தைகளின் மீது உங்கள் கனவுகளைத் திணிக்காமல் இருந்தாலே, அவர்கள் சிறப்பாக வருவார்கள் என்று கூறுகின்றனர். கல்பனா சாவ்லாவைப் போல் விண்வெளி வீராங்கனையாக வலம் வர இருக்கும் பவியின் 2 ஆசைகளில் ஒன்று மட்டுமே இப்போது நிறைவேறியிருக்கிறது. இன்னொரு ஆசை என்ன தெரியுமா? பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தனக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதே அது.

இந்த ஆசை எப்போது நிறைவேறுமோ தெரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எமனும் நானே… டிராபிக் போலீசும் நானே: விசித்திரமான போக்குவரத்து காவலர்!!
Next post என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாக மத்திய மந்திரிகள் பெயரில் மோசடி: கேரள தம்பதி கைது!!