மதம் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? இந்திய குழந்தைகளின் அதிர்ச்சி தரும் கற்பனை: யூ-டியூப் வீடியோ!!

Read Time:2 Minute, 12 Second

ac734109-d369-4ac3-8ca5-421344787510_S_secvpfவழிபாட்டுத் தலங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று கடவுளை வழிபடச் சொல்கிறோம். எந்த எதிர்ப்பும் காட்டாமல் குழந்தைகளும் வழிபடுகின்றனர். உண்மையில் குழந்தைகளின் உலகத்தில் கடவுள், மதம் என்பதற்கான வரையறை என்ன?

இதற்கான பதிலைத் தேடிய பயணத்தின் முடிவே இந்த 5 நிமிட வீடியோ. 7 முதல் 12 வயதிற்குட்பட்ட 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் மதம் குறித்து கேட்கப்பட்ட சில கேள்விகளும் பதில்களும் இந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

மதம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு அவர்கள் அளிக்கும் பதில் ஆச்சர்யமானது.

“மக்கள் எதை நம்புகிறார்களோ அதுதான் மதம்” என்கிறது ஒரு குட்டீஸ்.

“என் பெற்றோர் எனக்கு என்ன கற்றுக் கொடுக்கிறார்களோ அதுதான் மதம்” என்கிறான் ஒரு சிறுவன்.

“கடவுளுக்கு மட்டும்தான் தெரியும்” என்கிறாள் ஒரு சிறுமி.

அடுத்து நீங்கள் என்ன மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கேள்விக்கு திக்கித்திக்கி இந்தியன், மராத்தி குஜராத்தி, எனக்கு எந்த மதமும் இல்லை என்று கலவையான பதில்கள் வருகின்றன.

இறுதியாக மதங்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? என்ற கேள்விக்கு வந்த பதில் தான் நமக்கு அதிர்ச்சி தரக்கூடியது.

குண்டு வெடிப்புகளே இருக்காது, எல்லாரும் எல்லா விழாக்களையும் சேர்ந்து கொண்டாடுவார்கள், சண்டையே இருக்காது, மக்களுக்குள் எந்த பிரிவினையும் இருக்காது… என ஒவ்வெருவரும் ஒவ்வொருவிதமாக தங்கள் உள்ளுணர்வை வெளிப்படுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மைசூருவில் 3 மாத குழந்தையின் காலில் திரிசூல ரேகை!!
Next post தர்மபுரி அருகே பெண் சிசு கொலையா? போலீசார் விசாரணை!!