நாகர்கோவிலில் கடத்தப்பட்ட சிறுமி, பிச்சை எடுக்கும் கும்பலிடம் விற்பனையா? போலீசார் விசாரணை!!

Read Time:3 Minute, 22 Second

11a5d83c-90e1-4868-ae99-78972911dd2d_S_secvpfமதுரை பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கலைச் செல்வி (வயது 28).

இவர்களுக்கு சிவலெட்சுமி (12), சிவரஞ்சனி என 2 மகள்கள் உள்ளனர். தற்போது கலைச்செல்வி நாகர்கோவில் ரெயில்வே ரோட்டில் வசித்து வந்தார்.

இவர் வசித்து வந்த பகுதியில் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பண்டாரத்தைச் சேர்ந்த மாயாண்டி (37) என்பவரும் குடியிருந்து வந்தார்.

கடந்த 6–ந்தேதி மாயாண்டி, கலைச்செல்வியின் மகள் சிவலெட்சுமியை அழைத்துக் கொண்டு சென்றார். அதன் பிறகு அவர்கள் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை மாயாண்டி நாகர்கோவில் ரெயில் நிலையம் பகுதியில் நின்று கொண்டிருப்பதாக கலைச்செல்விக்கு தகவல் கிடைத்தது.

அங்கு விரைந்து சென்ற கலைச்செல்வி, மாயாண்டியிடம் தனது மகள் சிவலெட்சுமியை எங்கே? என்று கேட்டு தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இதைப்பார்த்துக் கொண்டிருந்த அந்த பகுதி மக்கள் மாயாண்டியை பிடித்தனர். பின்னர் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பொதுமக்கள் பிடியில் இருந்த மாயாண்டியை மீட்டு கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

அவரிடம் போலீசார் சிவலெட்சுமியை எங்கு அழைத்துச் சென்றாய்? என்று கேட்டனர். அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சிவலெட்சுமியை கலைச்செல்வி தன்னுடன் பிச்சை எடுக்க அனுப்பி வைத்ததாகவும், நானும், சிவலெட்சுமியும் ரெயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோது, ரெயில்வே போலீசார் என்னை பிடித்தனர். பணகுடி பகுதியில் என்னை இறக்கி விட்டு விட்டனர். சிவலெட்சுமி ரெயிலில் இருந்து இறங்கவில்லை. அவரை பற்றி எனக்கு தெரியாது என்று கூறினார்.

மாயாண்டி கூறுவது உண்மைதானா? சிறுமி சிவலெட்சுமியை பிச்சை எடுக்கும் கும்பலிடம் விற்றாரா? என்பது பற்றி போலீசார் விசாரிக்கிறார்கள்.

இதற்கிடையே கலைச்செல்வியின் இன்னொரு மகளான சிவரஞ்சனியை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவையில் வாகன சோதனை: 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் வாலிபர் கைது!!
Next post மதுரையில் தொழில் அதிபர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை!!