மாமி த்ரிஷாவும், மஞ்சக்கிழங்கு ஸ்ரேயாவும்! -75 பிரிண்ட் போட்ட தயாரிப்பாளர்

Read Time:1 Minute, 51 Second

17102007-thn14image2.jpgt80_shriya05.jpgமுன்பெல்லாம் வேற்றுமொழி படங்கள் சகட்டுமேனிக்கு இறக்குமதியாகி தமிழ் படங்களின் கலெக்ஷனில் ‘கை’வைத்துக் கொண்டிருந்தன. குறிப்பாக தெலுங்கு படங்களின் அணிவகுப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தன. நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி என்று வயிற்றிலிருந்து தமிழ்பேசிய ஹீரோக்கள் ஜனங்களை கைதட்ட வைத்தார்கள். பல வருடங்களுக்கு பிறகு மெல்ல நுழைந்த ராஜசேகர் உடம்பு எப்படியிருக்கு படத்தின் மூலம் கலெக்ஷன் பார்த்தார். இதையடுத்து மீண்டும் ஆந்திரகாருகள் தங்கள் வலது கால்களை, கோலிவுட் ஏரியாவில் அழுத்தமாக பதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பாஸ் என்ற படத்தின் மூலம் பல வருடங்களுக்கு பிறகு நம்ப ஏரியாவில் நுழைந்திருக்கிறார் நாகார்ஜுனா. அவர் மட்டும் இருந்தால் கொஞ்சம் அப்படி இப்படி அலுத்துக் கொள்வார்கள் ரசிகர்கள். ஆனால், அவரோடு டூயட் பாடியிருப்பது மாமி த்ரிஷாவும், மஞ்சக்கிழங்கு ஸ்ரேயாவும். ரசிகர்களுக்கு திடீர் அண்ணிகளாகிவிட்ட மேற்படி நடிகைகள் இருவரும் படத்தில் காட்டியிருக்கிற கவர்ச்சி தயாரிப்பாளருக்கு புது தெம்பை கொடுத்திருக்கிறது. விளைவு….? நேரடி தமிழ்ப்படம் போல் 75 பிரிண்ட் போட்டிருக்கிறார்களாம்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இலங்கைக்கு தரங்குறைந்த ஆயுதங்களை விற்பனை செய்ய பாகிஸ்தான் தீவிர முயற்சி
Next post `பார்முலா 1′ கார்பந்தயம்: பின்லாந்து வீரர் ரெய்க்கோனன் சாம்பியன்