கல்யாண சமையல் சாதம் ரீமேக்கில் நடிக்கும் சுருதிஹாசன்!!

Read Time:1 Minute, 15 Second

d6b4eb8d-2e33-4e45-813b-fe0e17b50bd5_S_secvpfபிரசன்னா, லேகா வாஷிங்டன் நடிப்பில் வெளியான படம் ‘கல்யாண சமையல் சாதம்’. இப்படத்தை ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியிருந்தார். வித்தியாசமான கதைக்களம் கொண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் பரவலான வரவேற்பை பெற்றது. இருப்பினும் பிரசன்னாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

தற்போது இப்படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது. இதில் இம்ரான் கான் நாயகனாகவும் சுருதிஹாசன் நாயகனாகவும் நடிக்கவுள்ளனர். இப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே தனுஷை வைத்து ‘ராஞ்சனா’ படத்தை இயக்கியவர்.

தமிழில் சுமாரான வரவேற்பை பெற்ற இப்படம் இந்தியில் பெரிய அளவில் வெற்றிப் பெறும் என்று பாலிவுட் தரப்பினர் எதிர்ப்பார்க்கின்றனர். இம்ரான் கான், ஸ்ருதி ஹாசன் ஏற்கனவே இந்தியில் வெளியான ‘லக்’ படத்தில் இணைந்து நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாட்டிகள் பற்றிய கதையாக வரும் இட்லி!!
Next post இல்லத்தரசிகளை மதிக்க வேண்டும்: ஜோதிகா!!