சென்னைக்கு தீவிரவாதிகளால் ஆபத்தா?: புதிய ஆய்வு தகவலால் பரபரப்பு!!

Read Time:4 Minute, 57 Second

c0369ccc-3a5d-4224-9ccd-d9f65a37b18b_S_secvpfசென்னையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து உள்ளதாக வெளியான புதிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் ‘வெரிஸ்க் மேபிள் கிராப்ட்’ என்று ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், உலக ஆபத்து பகுப்பாய்வு நிறுவனம் ஆகும். அதாவது, உலகமெங்கும் தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கான ஆபத்து உள்ள நகரங்களை ஆராய்ந்து அறிந்து, வங்கிகளுக்கும், இன்சூரன்சு நிறுவனங்களுக்கும் தகவல்கள் கூறுவதில் இந்த நிறுவனம் பிரபலமானது ஆகும்.

இந்த நிறுவனம் கடந்த 6 ஆண்டுகளாக (மார்ச், 2015 வரையில்) உலகமெங்கும் நடந்து வந்த தீவிரவாத தாக்குதல்களின் அடிப்படையில், 1,300 நகரங்களில் தீவிரவாத தாக்குதல் ஆபத்து நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து கண்டறிந்து உள்ளது. தாக்குதலின் தீவிரத்தின் அடிப்படையில், இடைவெளியின் அடிப்படையில் அதிக ஆபத்து, மிதமான ஆபத்து, லேசான ஆபத்து கொண்ட நகரங்களை இந்த அமைப்பு இப்போது பட்டியலிட்டுள்ளது.

அவற்றில் 64 நகரங்கள் தீவிரவாத தாக்குதல் ஆபத்து மிக அதிக வாய்ப்புள்ள நகரங்களாக கூறப்பட்டுள்ளன. 380 தாக்குதல்கள் நடத்தப்பட்டு, 1,142 பேரை பலிகொண்டு, 3,654 பேரை படுகாயம் அடையச்செய்து, பதற்றத்தை ஏற்படுத்திய ஈராக் தலைநகரமான பாக்தாத், இப்போதும் உலகிலேயே தீவிரவாத தாக்குதல்கள் நடத்தும் ஆபத்து மிக அதிகம் உள்ள நகர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

தொடர்ந்து அந்த நாட்டின் மொசூல், அல் ரமாடி, பாகுபா, கிர்குக், அல் ல்லா நகரங்கள் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. மணிப்பூர் மாநிலத்தின் தலைநகரமான இம்பால், காஷ்மீரின் கோடை தலைநகரான ஸ்ரீநகர் ஆகிய இரு நகரங்களும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து மிக அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இவ்விரு நகரங்களில் இம்பால் 32-வது இடத்திலும், ஸ்ரீநகர் 49-வது இடத்திலும் உள்ளது.

தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு மிதமான வாய்ப்புள்ள நகரங்களில் பட்டியலில் சென்னை உள்ளது. இதில் சென்னை 176-வது இடத்தில் உள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு குறைவான வாய்ப்புள்ள நகரங்கள் பட்டியலில் மும்பை, டெல்லி, கொல்கத்தா இடம் பிடித்துள்ளன. இவற்றில் மும்பை 298-வது, டெல்லி 447-வது, கொல்கத்தா 212-வது இடங்களில் உள்ளன.

இது தொடர்பாக ஆய்வு நடத்திய அமைப்பின் இந்திய பிரிவை சேர்ந்த அரவிந்த் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

இம்பால், ஸ்ரீநகர் ஆகிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து அதிகளவில் இருந்தாலும்கூட, அங்கெல்லாம் வணிக நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் அமையாது. பாதுகாப்பு படையினரை குறிவைத்துத்தான் தாக்குதல்கள் நடத்தும் வாய்ப்பு உள்ளது. பெருநகரங்களைப் பொறுத்தமட்டில், வணிக நிறுவனங்களை முடக்கவும், பெருமளவு உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தவும் தீவிரவாதிகள் குறி வைப்பார்கள். மாநிலங்கள் இடையே உளவு தகவல்களை பகிர்ந்துகொள்வதில் உள்ள குறைபாடுகள், கவலை தரக்கூடியதாக அமைந்துள்ளது. இந்தியாவில் எல்லை கடந்த தாக்குதல் ஆபத்து இல்லை. இந்திய முஜாகிதீன் போன்ற உள்நாட்டு தீவிரவாதிகளால்தான் அச்சுறுத்தல் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வில், ஏற்கனவே தீவிரவாத தாக்குதல்களுக்கு அடிக்கடி ஆளாகி வந்துள்ள மும்பை நகரை விட சென்னை நகரில் தாக்குதல் ஆபத்து அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காஷ்மீரில் ரூ.12 கோடி போதைப்பொருள் பறிமுதல்!!
Next post மேலும் ஒரு செல்பி சாவு: கேமராவுக்கு பதிலாக துப்பாக்கி விசையை அழுத்தி உயிருக்கு போராடும் இளம்பெண்!!