ஓரினச்சேர்க்கை திருமணத்தை அனுமதிக்கலாமா?: அயர்லாந்தில் நடந்தது வாக்கெடுப்பு!!

Read Time:1 Minute, 55 Second

97746312-4d07-4b55-b231-168411cd6742_S_secvpfஓரினச்சேர்க்கை திருமணத்தை அனுமதிக்கலாமா என அயர்லாந்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல என அந்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டு 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதல் முறையான ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

அந்நாட்டு சட்டத்தில் ஹோமோ அல்லது லெஸ்பியன் திருமணத்தை அனுமதிப்பது குறித்த ஷரத்து இடம்பெறலாமா என கேட்டு 3.2 மில்லியன் மக்களிடம் இவ்வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஆம் என்பதற்கு வாக்குகள் அதிகமாக கிடைத்தால் உடனடியாக சட்டப்படி ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு அனுமதி வழங்கப்படும் என அயர்லாந்தின் நீதி மற்றும் சமஉரிமைக்கான மந்திரி பிரான்சஸ் பிட்ஸ்ஜெரால்ட் கூறினார். இதன்படி வாக்கெடுப்பு மூலம் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு ஒப்புதல் கோரிய முதல் நாடு என்ற பெருமை அயர்லாந்துக்கு கிடைத்துள்ளது.

கடந்த காலங்களில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கலந்துகொண்டவர்களை விட, 50 சதவீதத்திற்கும் அதிகாமானோர் தற்போது நடந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டது பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: தரிசனத்துக்கு 18 மணி நேரம் ஆகிறது!!
Next post திருவொற்றியூரில் தவறான சிகிச்சையால் மாணவி முகம் கருகியது: உறவினர்கள் போராட்டம்!!