இரட்டை விரலுடன் 2 ரூபாய் – அதிமுகவினர் குஷி!

Read Time:2 Minute, 14 Second

மத்திய அரசால் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள புதிய 2 ரூபாய் நாணயத்தில் வளைக் கரத்தோடு இரட்டை விரல்கள் காணப்படுவதால் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். 2 ரூபாய் நாணயத்தை சேகரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு 1 ரூபாய் நாணய அளவிலேயே 2 ரூபாய் நாணயத்தையும் மத்திய அரசு வெளியிட்டது. இதனால் வியாபாரிகள், பஸ் கண்டக்டர்கள், பொதுமக்களுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. இரு நாணயங்களுக்கும் இடையில் வித்தியாசம் இல்லாததால் இந்தக் குழப்பம். இதையடுத்து இந்த இரண்டு நாணயங்களுக்கும் வித்தியாசம் இருக்கும் வகையில் புதிய நாணயங்களை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய இரண்டு ரூபாய் நாணயம் தற்போது புழக்கத்தில் வந்துள்ளது. இதில் ஒரு பக்கம் ரூ.2 என்ற எழுத்து பெரிதாக பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பக்கத்தில் ஒரு பெண் இரட்டை விரல்களைக் காட்டுவது போல உள்ளது. இந்த நாணயங்கள் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகம் முழுவதும் அதிக அளவில் புழக்கத்திற்கு வந்துள்ளது. இதைப் பார்த்து பொதுமக்களுக்கு வித்தியாசம் தெரிகிறதோ இல்லையோ, அதிமுகவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அம்மா’வே இரட்டை விரல்களைக் காட்டுவது போல இருப்பதாக அவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அந்த நாணயங்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளனர். செலவழிக்காமல் வீடுகளில் பத்திரப்படுத்தியும் வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஈராக்கில் போர்- தயாராக தீவிரவாதிகளுக்கு பின்லேடன் அழைப்பு
Next post காதல் திருமணம்: மகளுக்கு நடிகர் சிரஞ்சீவி உருக்கமான அழைப்பு