புருண்டியில் எதிர்க்கட்சி தலைவர் படுகொலை – விசாரணைக்கு அதிபர் உத்தரவு!!

Read Time:2 Minute, 8 Second

ed947e82-2a5c-42ff-9744-40baae620170_S_secvpfபுருண்டியில் உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விரைவான விசாரணைக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புருண்டியில், அதிபர் பியார்ரே நகுருன்ஜிசா பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் 3–வது தடவையாக அவர் போட்டியிடுகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டம் நடைபெறுகிறது. இதற்கிடையே அதிபர் பியார்ரே நகுருன்ஜிசா, தான்சானியா நாட்டில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க சென்றார். இந்த நிலையில் அங்கு திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டது.

இப்புரட்சியை அதிபர் பியார்ரேவுக்கு எதிராக செயல்படும் தளபதி கோட் பிராய்டு நியோம்பர் நடத்தினார். ஆனால் அரசு விசுவாச ராணுவ படைகள் புரட்சியை முறியடித்து விட்டது.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஜேடி பேருஷி மற்றும் அவரது மெய்காப்பாளர் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலைக்கு அதிபர் பியார்ரே நகுருன்ஜிசா தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அதிபரின் செய்தி தொடர்பாளர் இதை மறுத்துள்ளார். மேலும் இந்த படுகொலை பற்றி விரைவான விசாரணைக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாராபுரம் அருகே நிதி நிறுவன அதிபர் மகன் கிணற்றில் மூழ்கி சாவு!!
Next post அமெரிக்க கணித மேதை ஜான் நாஷ் மார் விபத்தில் பலி!!