நடிகர் சிரஞ்சீவி மகள் ஐதராபாத் திரும்புகிறார்- கணவர் வீட்டில் வசிக்கப் போவதாக அறிவிப்பு

Read Time:5 Minute, 35 Second

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் 2-வது மகள் ஸ்ரீஜா. கல்லூரி மாணவர் ஷிரிஷ்பரத்வாஜை காதல் திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரும் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பயந்து தலைமறை வானார்கள். நேற்று டெல்லி ஐகோர்ட்டில் திடீரென்று ஆஜராகி போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்தனர். இதை யடுத்து அவர்களுக்கு டெல்லி போலீசார் உரிய பாது காப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையில் ஸ்ரீஜா திருமணத்தை ஏற்பதாகவும், அவர் வீட்டுக்கு வந்தால் ஏற்றுக் கொள்வேன் என்றும் சிரஞ்சீவி அறிவித்துள்ளார். சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் முன்கோபி. அவரால் ஸ்ரீஜா-ஷிரிஷ்பரத்வாஜிக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று செய்தி பரவியது. இதை தொடர்ந்து பவன் கல்யாண் தனது கைத்துப் பாக்கியை ஐதராபாத் ஜ×ப்ளி ஹில்ஸ் போலீசில் நேற்று ஒப்படைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- எங்களால் உயிருக்கு ஆபத்து என்று ஸ்ரீஜா கோர்ட்டில் பாதுகாப்பு கேட்டதை அறிந்து மனவேதனை அடைந்தேன். நாங்கள் குண்டர்களோ, ரவுடி களோ அல்ல. என் ரசிகர் களும் அன்பானவர்கள்.

நான் சென்னை ரைபிள் கிளப்பில் உறுப்பினராக இருக் கிறேன். எனது அண்ணன் சிரஞ்சீவி லைசென்சுடன் கூடிய துப்பாக்கியை அன்பளிப்பாக கொடுத்தார். எனது அண்ணன் மகள் ஸ்ரீஜா எங்களால் உயிருக்கு ஆபத்து என்று கூறி விட்டதால் என்னிடம் இருந்த துப்பாக்கியை போலீசில் ஒப் படைக்கிறேன்.

காதல் விவகாரம் பற்றி ஸ்ரீஜா என்னிடம் பேச வில்லை. நான் உணர்ச்சி வசப்படக்கூடியவன் என்று அண்ணனும் என்னிடம் சொல்லாமல் மறைத்தார். ஆனாலும் 4 மாதங்களுக்கு முன்பே காதல் பற்றி எனக்கு தெரியும். காதலருடன் ஓடிப் போக தயாராக இருக்கிறாள் என்ற தகவலும் எனக்கு வந்தது. நான் ஓடிப் போக மாட்டாள் என்று நம்பினேன்.

உண்மையான காதல் ஓடி ஒளியாது. தைரியமாக நின்று போராடி இருக்க வேண்டும். எங்களால் எந்த ஆபத்தும் ஏற்படாது. அவர்களை வர வேற்க தயாராக இருக்கி றோம். இவ்வாறு அவர் கூறினார்.

பவன் கல்யாணுக்கும் நந்தினி என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திரு மணம் நடந்தது. தற்போது அவரை பிரிந்து ரேணுதே சாய் என்பவருடன் குடும்பம் நடத்துகிறார். முதல் மனைவி ரூ. 5 லட்சம் ஜீவனாம் சம் கேட்டு வழக்கு தொடர்ந் துள்ளார். அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

கணவருடன் ஐதராபாத் திரும்ப ஸ்ரீஜா முடிவு செய்துள் ளார். இதுபற்றி அவர் கூறிய தாவது:- ஒரு வருடத்துக்கு முன்பே காதல் விவரத்தை என் தந்தையிடம் சொன்னேன். ஷிரிஷ் பிராமணர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் ஏற்க மறுத்தனர். நான் எவ்வளவோ கெஞ்சியும் கேட்கவில்லை. அதனால் திருமணம் செய்து கொண்டோம். போலீஸ் அதிகாரிகளிடம் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தோம். அவர்கள் கண்டு கொள்ள வில்லை. அப்பா செல்வாக்கு உள்ளவர். தென் இந்தியாவில் அவரை நன்றாக தெரியும். எனவே தான் டெல்லி வந்து வக்கீல் வீட்டில் தங்கினோம். விரைவில் ஐதராபாத் திரும்பு வோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஷிரிஷ் கூறும்போது, “நான் ஒரு பெண்ணை கடத்தியதாக கூறப்படுவது உண்மையல்ல.4 நண்பர்கள் ஒரு பெண்ணோடு சேர்ந்து சினிமாவுக்கு போனோம். அவள் தந்தை கடத்தி விட்டதாக புகார் கொடுத்து விட்டார். அதை நிரூபிக்க முடியாததால் வழக்கு தள்ளுபடியாகி விட்டது” என்றார்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, தனது மனைவி புவனேஸ் வரியுடன் சிரஞ்சீவி வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் கள் சிரஞ்சீவிக்கும், அவரது மனைவி சுரேகா வுக்கும் ஆறுதல் கூறினார்கள். அப் போது சிரஞ்சீவியும், அவரது மனைவியும் கண்ணீர் விட்டு அழுததாக தெரிகிறது.

சுரேகாவும், புவனேஸ்வரி யும் நெருங்கிய தோழிகள் என் பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மாஜிஸ்திரேட்டு கல்லால் அடித்து கொலை
Next post அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் தொடர்பாக விசாரணைக் குழுக்கள் நியமனம்