முஸ்லிம் என்பதால் மும்பையின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியே துரத்தப்பட்ட இளம்பெண்!!

Read Time:3 Minute, 0 Second

eb8595cf-7476-4dcb-8dc9-08c304539f4b_S_secvpfமும்பையை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பெண் ஒருவர் முஸ்லிம் என்பதால் வெளியே துரத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மிஸ்பா குவாதரி என்ற 25 வயது பெண் ஊடகத்துறையில் வேலை பார்த்து வருகிறார். இணையத்தில் வாடகை வீட்டில் பெண் ஒருவர் தங்குவதற்கு இடம் இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து விட்டு, அந்த வீட்டில் எற்கனவே தங்கியிருக்கும் இரு பெண்களை தொடர்புக் கொண்டுள்ளார். அவர்கள் சம்மதம் தெரிவித்துவிட, தனது உடமைகளுடன் புதிய வீட்டிற்கு செல்ல தயாராகிகொண்டிருந்த போது அந்த வீட்டின் தரகர் போன் செய்து நீங்கள் முஸ்லிம் என்பதால் உங்களுக்கு வீடு தரமுடியாது என தெரிவித்துள்ளார்.

ஆனால் மிஸ்பா அவருடன் சண்டை போட்டுவிட்டு அவரின் கடும் எதிர்ப்பையும் மீறி அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ளார். ஆனால் தரகர் போன் மூலம் நீ வீட்டை காலி செய்யவிட்டால் உன்னையும் உடமைகளையும் வெளியே துக்கியேறிந்து விடுவேன் என மிரட்டியப்படியே இருந்துள்ளார். இதனால் அடுக்குமாடி குடியிருப்பின் பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டார் மிஸ்பா. அவர்களும் முஸ்லிம்களுக்கு வீடு கொடுப்பது இல்லை என்பது எங்கள் நிறுவனத்தின் கொள்கை என கூறியுள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறியவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் தான் மும்பையை சேர்ந்த நிறுவனம் ஒன்று முஸ்லிம் என்பதால் எம்.பி.ஏ. பட்டதாரி ஒருவருக்கு வேலை தர மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த பிரச்சனை முடிவதற்குள்ளாகவே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியே துரத்தப்பட்டுள்ளார் இந்த இளம்பெண்.

ஹிட்லர் காலத்தில், அங்குள்ள உணவகங்களில் யூதர்களுக்கு அனுமதியில்லை என போர்ட் வைக்கப்பட்டிருக்கும். இப்போது இந்தியாவும் அது போன்ற ஒரு இருண்ட காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாமதமாக வேலைக்கு வந்த 17 விமான பணிப்பெண்கள் அதிரடி சஸ்பெண்டு!!
Next post ரெயில் விபத்தில் இரு கைகளையும் இழந்த மாணவி 12-ம் வகுப்பு தேர்வில் 63 சதவீதம் மதிப்பெண் பெற்றார்!!