பாஷாவுக்கு ஆயுள்-அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

Read Time:3 Minute, 43 Second

25acquist.jpgகோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அல் உம்மா தலைவர் எஸ்.ஏ. பாஷாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் முகம்மது அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாஷாவின் தம்பி நவாப்கான், மகன் சித்திக் அலி, தாஜூதின், முகம்மது அலிகான் குட்டி, முகமது பஷீர், உசீர், பாபு, ஜாகீர் உசேன் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார். 1998ம் ஆண்டு கோவை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 60 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர். இச் சம்பவம் தொடர்பாக அல் உம்மா தலைவர் பாஷா, அவரது மகன் சித்திக் அலி, தம்பி நவாப் கான், பொதுச் செயலாளர் முகம்மது அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 168 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. கோவை சிறை வளாகத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இறுதியில் 158 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். மதானி உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 158 குற்றவாளிகளில் சாதாரண குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட 76 பேருக்கு தண்டனை விவரம் வெளியிடப்பட்டுவிட்டது. அவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டனர்.

இந் நிலையில் கொலை, சதி, ஆயுதக் கடத்தல், ஆயுதம் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட பாஷா, நவாப்கான், அன்சாரி உள்ளிட்ட 70 பேருக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது. இதற்காக இவர்கள் அனைவரும் நீதிபதி உத்திராபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் ஒவ்வொருவரையும் தனித் தனியாக அழைத்து அவர்களுக்கான தண்டனையை நீதிபதி அறிவித்தார்.

அப்போது அல்-உம்மா தலைவர் பாஷாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். அல்-உம்மா அமைப்பின் பொதுச் செயலாளர் முகம்மது அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். பாஷாவின் தம்பி நவாப்கான், மகன் சித்திக் அலி, தாஜூதின், முகம்மது அலிகான் குட்டி, முகமது பஷீர், உசீர், பாபு, ஜாகீர் உசேன் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்

தண்டனை விவரம் வெளியிடப்படுவதையொட்டி கோவை நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகர எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் விடிய விடிய தீவிர வாகனக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. கோவை முழுவதும் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதுமே கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அனுராதபுரத்திற்குப் புதிய தளபதி நியமனம்
Next post நடுக்கடலில் நான்கு யாழ். தமிழர்கள் கைது