வாலு படத்துக்கு வந்த சோதனை!!

Read Time:1 Minute, 28 Second

Untitled-113 (1)சிம்பு நடித்துள்ள வாலு இதோ அதோ என்று போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேலும் ஒரு சிக்கல் அந்தப் படத்துக்கு.

சிம்பு நடிக்கும் படத்தின் பாடல்களை உருவாக்குவதில் அவரும் தனது பங்களிப்பை செலுத்துவார். பாடல்களில் அவரது ஐடியா தூக்கலாக இருக்கும். வாலு படத்திலும் அப்படியே. இந்தப் படத்துக்கு இசை எஸ்.எஸ்.தமன்.

வாலு படத்தில், யூ ஆர் மை டார்லிங் என்ற பாடலை தமனும், சிம்புவும் இணைந்து பாடினர். இந்தப் பாடலின் டியூனை தான் இசையமைக்கும் தெலுங்குப் படம் ஒன்றிலும் பயன்படுத்தினார் தமன். வாலு முதலில் வரும் என்ற எண்ணத்தில் இதனை அவர் செய்தார்.

ஆனால், வாலு படத்தை முந்திக் கொண்டு அந்த தெலுங்குப் படம் இன்று வெளியாகியுள்ளது. இரசிகர்களைப் பொறுத்தவரை தெலுங்குப் படத்தில் வந்த டியூனை வாலு படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றுதான் நினைப்பார்கள்.

படம் தாமதமானாலும் நினைக்காத திசையிலிருந்தும் சோதனைகள் வரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈழத்தமிழனாக வரும் சூர்யா!!
Next post கள்ள நோட்டு வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது: மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு!!