அமெரிக்காவின் கிரீன் கார்டு போல திறமையான வெளிநாட்டினருக்கு புளூ கார்டு: ஐரோப்பிய ஒன்றியம் புதிய திட்டம்

Read Time:1 Minute, 12 Second

திறமையான வெளிநாட்டினர் குடும்பத்துடன் குடியேறி வேலை பார்ப்பதற்கு வசதியாக அமெரிக்கா கிரீன் கார்டு வழங்குவதுபோல, ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்பவர்களுக்கு புளூ கார்டு வழங்க திட்டமிட்டு உள்ளது. இது பற்றி ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ஐரோப்பிய நாடுகளில் என்ஜினீயரிங், கம்ப்ïட்டர் தொழில்நுட்பம் தெரிந்த நிபுணர்கள் பற்றாக்குறை உள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் தொழில்நுட்பம் அறிந்த திறமையான வெளிநாட்டினர் 2 கோடி பேர் தேவைப்படுகிறார்கள். அதோடு உலகின் மிகச்சிறந்த அறிவாளிகள் வேலை தேடி அமெரிக்கா செல்வதை தடுப்பதற்கு இப்படி புளூ கார்டு வழங்குவது தவிர்க்க முடியாதது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நடுக்கடலில் நான்கு யாழ். தமிழர்கள் கைது
Next post யாழ்ப்பாணத்தில் புதிய நீதிமன்றத் தொகுதி பிரதம நீதியரசரால் திறந்து வைப்பு!