ஏப்ரல், மே மாதங்களில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை 8.90 லட்சம் பேர் கண்டு ரசித்தனர்!!

Read Time:1 Minute, 27 Second

0a615fc3-8404-47a1-ad88-a23e9f5a1b54_S_secvpfநீலகிரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை சுற்றுலா சீசன்களை கட்டியது.

மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை துறை சார்பில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

கோடை மழை அதிகளவில் இருந்தபோதிலும் சுற்றுலா பயணிகள் கண்காட்சிகளை காண அதிகளவில் வந்திருந்தனர். கடந்த 2 மாதங்களில் அரசு தாவரவியல் பூங்காவை மட்டும் 8 லட்சத்து 90 ஆயிரத்து 225 பேர் கண்டுகளித்தனர்.

நுழைவு கட்டணம், காமிரா, வீடியோ காமிரா கட்டணமாக ரூ.2 கோடியே 61 லட்சத்து 50 ஆயிரத்து 660 வசூலிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தாவரவியல் பூங்காவுக்கு 8 லட்சத்து 38 ஆயிரத்து 127 பேர் வருகை தந்தனர். நுழைவு கட்டணம் காமிராக்கள் கட்டணமாக 2 கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து 115 வசூலானது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராணுவத்தில் பணியாற்றும் கணவர்களின் ஆயுளுக்காக சப்பரத்தை தோள்களில் சுமந்த பெண்கள்!!
Next post கடலூர் அருகே ஜீப் மீது வாகனம் மோதல்: டிராபிக் ராமசாமியின் பெண் உதவியாளர் படுகாயம்!!