தஞ்சையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 54 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல்!!
தஞ்சை எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் கணபதி (34), இவர் அம்மாபேட்டை தென்கொண்டார் குடியிருப்பில் அனுமதிபெற்று பட்டாசுக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் அனுமதியின்றி தஞ்சை மேல மானோஜிப்பட்டி திருவள்ளுவர் நகரில் குடிசை வீட்டில் பட்டாசு குடோன் வைத்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தஞ்சை மருத்துவகல்லூரி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பட்டாசு குடோனை சோதனை செய்தனர். அப்போது குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 54 கிலோ வெடிமருந்துகளையும், 3½ கிலோ வெடி தயாரிப்பு உதிரிபாகங்களையும் கைப்பற்றினர். அங்கு போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சென்று ஆய்வு செய்தனர். வெடிமருந்து பதுக்கியது குறித்து கணேசனிடம் மருத்துவகல்லூரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உளளது.