இந்தியாவில் டேட்டிங்குக்கான தேதியை முடிவு செய்வதில் பெண்களின் கையே மேலோங்கியுள்ளது!!

Read Time:1 Minute, 38 Second

ff9b8268-9da1-4e51-8cf1-715ba7520398_S_secvpfஅறிமுகம் இல்லாத ஆடவர்களுடன் டேட்டிங் செய்யும் கலாசாரத்தில் இந்தியாவைப் பொருத்தவரை பெண்கள்தான் முடிவு எடுக்கின்றனர் என தெரியவந்துள்ளது.

பிரபல டேட்டிங் இணையதளமான ‘ட்ரூலிமேட்லி’, நாடுதழுவிய அளவில் நடத்திய சர்வேயின் அடிப்படையிலும், இணையதள பயன்பாட்டின் அடிப்படையிலும் அறிமுகம் இல்லாத ஆடவர்களுடன் டேட்டிங் செய்யும் விஷயத்தில் டேட்டிங்குக்கான தேதியை முடிவு செய்வதில் 46 சதவீதம் அளவுக்கு பெண்களின் முடிவே இறுதியாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இவர்களில் 48 சதவீதம் பெண்கள் தனது பார்ட்னரின் உடல் வலிமையைவிட மூளைத்திறனைத்தான் அதிகம் விரும்புகின்றனர். 52 சதவீதம் பெண்கள் தனது துணைவன் ‘கண்ணுக்கு லட்சணமாக’ இருக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.

டேட்டிங்குக்கு போக முடிவு செய்யும் ஆண்களில் 47 சதவீதத்தினரும், பெண்களில் 48 சதவீதத்தினரும் தங்களது பேஸ்புக் பாஸ்வோர்டை டேட்டிங் துணைவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆட்சேபனை இல்லை என தெரிவித்துள்ளனர் என இந்த ஆய்வின் முடிவு குறிப்பிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழிஞ்சாம்பாறை அருகே மகனை வெட்டி கொன்ற தந்தை!!
Next post விவாகரத்து செய்த மனைவியை கற்பழித்து, கருக்கலைப்புக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை!!