ஆபரேஷன் செய்தபோது 9 மாத குழந்தையின் நெஞ்சுக்குள் டாலரை வைத்து தைத்த டாக்டர்கள்

Read Time:1 Minute, 28 Second

baby06.gifடெல்லியை சேர்ந்த உதய குமார் என்ற 9 மாத ஆண் குழந்தைக்கு காய்ச்சல், ஜலதோஷம், நெஞ்சடைப்பு ஆகிய கோளாறுகள் இருந்தன. இதனால் அக்குழந்தையை டெல்லியில் அரசுக்கு சொந்தமான லோக் நாயக் ஜெயபிரகாஷ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் ஆபரேஷன் செய்தனர். அப்போது குழந்தை அணிந்திருந்த சங்கிலியில் இருந்த டாலரை, ஆபரேஷனுக்கு பிறகு காணவில்லை. அது கீழே விழுந்திருக்கும் என்று குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால் குழந்தை மூச்சு விட சிரமப்பட்டதால், எக்ஸ்-ரே எடுத்து பார்த்தனர். அப்போது குழந்தையின் நெஞ்சு பகுதியில் அந்த டாலர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆபரேஷன் செய்தபோது, டாக்டர்கள் அலட்சியமாக டாலரை அங்கே வைத்து தைத்து இருப்பது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து டெல்லி சுகாதார மந்திரி யோகானந்த் சாஸ்திரி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கு காரணமான டாக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கலிபோர்னியாவில் காட்டுத் தீ: 5 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவு; தீயில் கருகி 5 பேர் பலி; 1,500 வீடுகள் எரிந்து சாம்பல்
Next post வள்…வள்..வள்…! நாயாய் துரத்தும் புகார்! -ஓடி ஒளியும் ஸ்டண்ட் மாஸ்டர்!