தீவிரவாதத்தை ஒழிக்கும் முயற்சியில் மாலைதீவு அரசு தீவிரம்

Read Time:3 Minute, 45 Second

சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தமது உறவைக் கட்டியெழுப்பும் இஸ்லாமியப் போராளிகள் குழுவின் முயற்சியை சீர்குலைக்கும் நடவடிக்கையினை ஆரம்பித்திருப்பதாக மாலைதீவின் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கையூம் தெரிவித்துள்ளார். மேலும், மாலைதீவிலுள்ள 330,000 ஸுன்னி முஸ்லிம்களில் ஒரு சிலர் மாலைதீவின் முக்கிய வர்த்தகமான சுற்றுலாத்துறையைப் பாதிக்கும் வகையில் தீவிரவாத நடவடிக்கைகளை இங்கு மேற்கொண்டுள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் சுற்றுலாப் பயணிகளை இலக்குவைத்து இவர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து நாடு மிகவும் மோசமான பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளதென ஊடகவியலாளர்களுக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இன்றைய உலகில் என்ன நடக்கின்றதென்பதனை மாலைதீவு மக்கள் நன்கறிந்துள்ளனர். இங்கிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு கல்விபயிலச் செல்பவர்கள் அங்கிருந்து வுரும்போது சமய ரீதியான தீவிரவாதக் கருத்துகளையும் உள்வாங்கியவர்களாகவே வருகின்றனர். இதேநேரம், மாலைதீவிலுள்ள தீவிரவாதிகளுக்கு வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளிடமிருந்தே பண உதவி கிடைக்கின்றது. இது முற்றிலும் உண்மையான விடயமாகும். இது தொடர்பான உரிய நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டிருப்பதுடன், இதனை ஒழிப்பதற்கு மிகவும் தீவிரமாக நாம் உள்ளோம்.

இதேவேளை, வெளிநாட்டிலிருந்து எமது நாட்டைச் சீர்குலைப்பதற்கான திட்டங்களும் பண உதவிகளும் பெறப்படுகின்றமைக்குரிய சரியான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளனவென தெரிவித்தார்.

இதேநேரம், இத்தீவிரவாத அமைப்புகள் அல்-ஹைடா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையனவா என்பதற்குரிய சரியான ஆதாரங்கள் எம்மிடம் இல்லாதபோதும் இது தொடர்பில் இக்குழுக்களுக்கும் அல்-ஹைடாவிற்கும் இடையில் தொடர்புகள் இருக்குமா என்ற மேலதிக விசாரணையை நாம் தொடர்ந்து மேற்கொண்டுள்ளோமென அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம், இவ்விசாரணைகளை மேற்கொள்வதற்கு நாம் இலங்கை, இந்தியா, பிரிட்டன் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் உதவியையும் நாடவேண்டியுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ஐம்பதுக்கும் அதிகமானவர்களில் குற்றவாளியை அடையாளங்காட்ட இவ்விபத்தில் சிக்குண்ட பெண் ஒருவரின் உதவியை நாம் நாடியுள்ளோமென ஜனாதிபதி மௌமூன் அப்துல் ைகயூம் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பால்மா வாங்க பணம் இல்லை இளம் தாய் தற்கொலை
Next post த்ரிஷாவுக்கு அம்மாவா? “நோ…நோ…” -குஷ்பு ஓட்டம்.