நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவி கற்பழிப்பு: சக மாணவர் கைது!!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 25). இவர் நெல்லை சட்டக்கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் முதலாமாண்டு படித்த போது, அவருடன் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி செல்வி (22,பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் படித்துள்ளார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையறிந்த செல்வியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தையடுத்து செல்வி திருச்சியில் உள்ள சட்டக்கல்லூரிக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் இருவரும் செல்போன் மூலம் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். மேலும் அடிக்கடி சந்தித்து பேசியும் வந்தனர்.
சமீபத்தில் மகாலிங்கம், செல்வியை நெல்லைக்கு அழைத்து வந்தார். பின்னர் 2பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். அப்போது உல்லாசமும் அனுபவித்துள்ளனர். இதையடுத்து செல்வி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மகாலிங்கத்திடம் கூறியுள்ளார். ஆனால்அவர் மறுத்துவிட்டார்.
இது குறித்து செல்வி பாளை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தேன்மொழி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி மகாலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.