சேவை செய்ய வயது ஒரு தடை இல்லை: கர்நாடக உள்ளாட்சி தேர்தல் 102–வயது கவுதம்மா பஞ். உறுப்பினராக தேர்வு!!

Read Time:1 Minute, 42 Second

a1344410-68b0-4dde-8876-7c7fdbd8966f_S_secvpfகர்நாடக மாநிலத்தில் 2 கட்டங்களாக நடை பெற்ற உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் சாம்ராஜ் நகர் மாவட்டம் தொண்டாலத்தூர் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட 102 வயது பாட்டி கவுதம்மா வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடக வரலாற்றில் 102 வயது பெண் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. இதுதான் நாட்டிலும் முதல் முறை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறித்து கவுதம்மாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–

பிரசாரம் செய்தது, வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டது புதிய அனுபவமாக இருந்தது. முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது.

குடிநீர், சாலை, கழிப்பறை, பள்ளிகூடம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாத எனது கிராமத்துக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்திலே தேர்தலில் போட்டியிட்டேன்.

என் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்த தொண்டாலத்தூர் கிராம மக்களுக்கு உயிருள்ள வரை சேவை செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்டெம் செல் தானம்: குவைத்திலிருந்து இந்தியாவுக்கு பறந்து வந்து ஏழு வயது சிறுமியை காப்பாற்றிய நல்ல உள்ளம்!!
Next post சக மாணவர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 9-ம் வகுப்பு மாணவி!!