உயர வளர்ச்சி குறைபாடால் மகனை இடுப்பில் சுமந்து வந்த தாய்: கலெக்டரிடம் வேலை கேட்டு மனு!!

Read Time:2 Minute, 3 Second

9a7103bc-1afd-4456-8467-c7a4c3665439_S_secvpfமதுரை மேலக்கால் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மனைவி முத்துமாரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

அழகர்சாமி இறந்து விடவே 3 பிள்ளைகளையும் முத்துமாரிதான் வளர்த்து வந்தார். இதில் மூத்த மகனான தினேஷ்குமார் (வயது16) அங்குள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்தான்.

தினேஷ்குமார் பிறப்பிலிருந்தே வளர்ச்சி குறைவால் குள்ளமாக காணப்பட்டான். 3½ அடி உயரமுள்ள இந்த மாணவர் 10–ம் வகுப்பில் 365 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

11–ம் வகுப்பில் சேர இருந்த நிலையில் உயர வளர்ச்சியின்மையை காரணம் காட்டி பள்ளியில் சேர்க்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தனது 16 வயது மகனை குழந்தையைப்போல் இடுப்பில் வைத்து சுமந்து முத்துமாரி மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்தார். மனுநீதி நாளான இன்று கலெக்டர் சுப்பிரமணியனிடம் முத்துமாரி, தனது மகன் தினேஷ்குமாரை மேற்கொண்டு படிக்க பள்ளியில் சேர்க்கவில்லை என்பதால் ஏதாவது வேலை வாங்கி தருமாறு கோரிக்கை விடுத்தார்.

அதனை கேட்ட கலெக்டர் சுப்பிரமணியம் தினேஷ்குமாரை நான் பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்தார். அதன்பின்னர் முத்துமாரி தனது மகனை இடுப்பில் வைத்தபடி வீட்டுக்கு சென்றார். 16 வயது மகனை இடுப்பில் தூக்கி வந்தததை அங்கிருந்தவர்கள் அதிசயமாக பார்த்தார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூளைச்சாவு அடைந்த புதுவை மாணவியின் உடல் உறுப்புகள் தானம்!!
Next post திருமண நேரத்தில் மாயமான மணமகனின் பெற்றோர் கைது!!