7 வருடமாக நுரையீரலுக்குள் சிக்கியிருந்த மீன் எலும்பை போராடி அகற்றிய மருத்துவர்கள்!!
ஓமன் நாட்டைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சாப்பிடும்போது, புரை ஏறியதால் மூச்சுக்குழாய் வழியாக சென்ற மீன் எலும்பு நுரையீரலுக்குள் மாட்டிக் கொண்டது. இதனால் கடும் உடல் உபாதைகளுக்கு ஆளான அவர், ஓமன் நாட்டில் செல்லாத மருத்துவமனையே இல்லை. ஆனால் அவர்களால் அவரது நுரையீரலில் உள்ள மீன் எலும்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், கடந்த சில வருடங்களாக அடிக்கடி நிமோனியா காய்ச்சலால அவதிப்பட்ட அவர் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது நுறையீரலில் உள்ள மீன் எலும்பை ஸ்கேனில் கண்டுபிடித்தனர். சிக்கிய மீன் எலும்பினால் அவரது வலது பக்க நுரையீரலின் அடிப்பகுதியில் சீழ் பிடித்திருந்தது. அறுவை சிகிச்சையில் அவர் பிழைப்பதற்கு வாய்ப்பு குறைவாக இருந்தபோதும் தைரியமாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.
திறமை வாய்ந்த மருத்துவர் குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. இதில் 1.5 செ.மீ. x 1.4 செ.மீ. அளவுள்ள மீனின் எலும்பை அகற்றினர். நுரையீரலில் தேங்கியிருந்த சீழைக் கருவி மூலமாக உறிஞ்சி எடுத்தனர். இதனால் 7 வருட போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த வார இறுதியில் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் இன்னும் 2 மாதங்களில் அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவாரென்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.