By 11 June 2015 0 Comments

ஹனி என்பது த்ரிஷா… – என்ன ஆச்சர்யம்!!

trishaநடிகை திரிஷா, இணையதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு திரிஷா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ‘அரண்மனை-2’ மூலம் பேய் படத்தை தேர்வு செய்து நடிப்பது ஏன்? அது சவாலான வேடம் என்பதாலா அல்லது பேய் பட சீசன் என்பதாலா?
பதில்:- ‘அரண்மனை-2’ படத்தில் எனக்கு சவாலான வேடம். அதோடு, சுந்தர் சி. டைரக்ஷனில் நடிக்க விரும்புகிறேன்.

கேள்வி:- 10 வருடங்களுக்கு மேலாக நான் உங்களை காதலிக்கிறேன். என்னை திருமணம் செய்துகொள்வீர்களா?
பதில்:- தொடர்ந்து காதலித்துக் கொண்டிருங்கள். திருமணம்… அப்புறம் பார்க்கலாம்.

கேள்வி:- உங்களை பெற்றோர்கள் எப்படி அழைப்பார்கள்?
பதில்:- ‘ஹனி.’

கேள்வி:- தினமும் நீங்கள் எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள்?
பதில்:- படப்பிடிப்பு இருக்கும்போது, தினமும் ஐந்து மணி நேரம் தூங்குகிறேன். படப்பிடிப்பு இல்லாத நாட்களில், 12 மணி நேரம் தூங்குகிறேன்.

கேள்வி:- செல்வராகவன் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?
பதில்:- அந்த படத்தை நான் தவிர்க்கவில்லை. ‘கால்ஷீட்’ பிரச்சினை காரணமாகவே நடிக்கவில்லை.

கேள்வி:- பயணம் செய்ய விரும்பும் நாடு எது?
பதில்:- தென் அமெரிக்கா.

கேள்வி:- சின்ன வயதில் குறும்பு செய்தீர்களா?
பதில்:- நம்ப முடியாத அளவுக்கு குறும்புகள் செய்து இருக்கிறேன்.

கேள்வி:- தெலுங்கு நடிகர் ராணாவுடன் ஜோடியாக நடிப்பீர்களா?
பதில்:- ஏன் நடிக்கக் கூடாது?

கேள்வி:- வருங்காலத்தில், ஆண் குழந்தையை விரும்புவீர்களா, பெண் குழந்தையை விரும்புவீர்களா?
பதில்:- ஆண் ஒன்றும், பெண் ஒன்றும்…

கேள்வி:- ஹாலிவுட் படத்தில் நடிக்க விருப்பமா?
பதில்:- லியோனார்டோ டி காப்ரியோவுடன் நடிக்க விரும்புகிறேன்.

கேள்வி:- உங்களுக்கு பிடித்த தமிழ் பட கதாநாயகி யார்?
பதில்:- சிம்ரன்.

கேள்வி:- முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து இருக்கிறீர்களா?
பதில்:- எங்கள் பள்ளிக்கூட விழாவில், ‘அம்மா’வை முதன் முதலாக சந்தித்து இருக்கிறேன். சிறப்பு விருந்தினராக அவர் எங்கள் பள்ளி விழாவுக்கு வந்திருந்தார்.

கேள்வி:- இன்னும் 10 வருடங்கள் கழித்து நடிகையாக இருப்பீர்களா, குடும்ப பெண்ணாக இருப்பீர்களா?
பதில்:- வாழ்நாள் முழுவதும் நடிகையாகவே இருக்க ஆசைப்படுகிறேன்.

கேள்வி:- எந்த மாதிரியான படங்களை விரும்பி பார்ப்பீர்கள்?
பதில்:- திகில் படங்களை விரும்பி பார்ப்பேன்.

கேள்வி:- விஜய்யுடன் நீங்கள் நடித்த படங்களில் பிடித்தது?
பதில்:- கில்லி.

கேள்வி:- அஜீத்துடன் நடித்ததில் பிடித்த படம்?
பதில்:- என்னை அறிந்தால். மேற்கண்டவாறு திரிஷா பதில் அளித்து இருக்கிறார்.



Post a Comment

Protected by WP Anti Spam