ஒரே நாளில் களம் இறங்கும் கமல், தனுஷ் , சிவகார்த்திகேயன்!!

Read Time:1 Minute, 49 Second

movieதனுசின் ‘மாரி’, சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ படங்கள் அடுத்த மாதம் (ஜூலை) 17–ந் திகதி ரிலீசாக உள்ளன.

தற்போதுகமலின் ‘பாபநாசம்’ படமும் இதே தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.இதனால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டுஉள்ளது.

‘பாபநாசம்’ படத்தில் கமல் ஜோடியாக கவுதமி நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ்ரீமேக்காக இப்படம் தயாராகியுள்ளது.

தனுசும், சிவகார்த்திகேயனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். ‘3’ படத்தில்சேர்ந்து நடித்தார்கள். தற்போது இருவருக்கும் கருத்துவேறுபாடுஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கள் வந்துள்ளன.இந்த நிலையில்தான் இருவர் படமும்ஒரே நாளில் மோத வருகிறது.

‘மாரி’ படத்தை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். இதில் தனுஷ் ஜோடியாக காஜல் அகர்வால்நடித்துள்ளார். பின்னணி பாடகர் விஜய் ஜேசுதாசும் முக்கிய கேரக்டரில்வருகிறார். ‘ரஜினி முருகன்’ படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார்.

‘ரஜினி முருகன் இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். காதல், காமெடி படமாக தயாராகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபாச கருத்தால் தொடரும் சர்ச்சை…!!
Next post காக்கா முட்டை பார்த்த தோனி!!!