பாளையில் போலீஸ்காரரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது!!
பாளை சாந்திநகர் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் மனோகர் (வயது 35). இவர் நெல்லை மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு இவரும், இவரது மனைவியும் மோட்டார் சைக்கிளில் பாளையில் இருந்து, சாந்திநகருக்கு சென்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் அவர்கள் மீது மோதுவதுபோல் வந்துள்ளது. இதனால் மனோகர் டிரைவரை சத்தம் போட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கார் டிரைவர் அருள்ராஜ், போலீஸ்காரர் மனோகரை தாக்கியுள்ளார்.
இதுகுறித்து மனோகர் பாளை போலீசில் புகார் செய்தார். பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடிபோதையில் கார் ஓட்டி வந்த அருள்ராஜை கைது செய்தனர். கைதான அருள்ராஜ் நெல்லை சட்டக்கல்லூரியில் 2–ம் ஆண்டு படிக்கும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.