உணவே விஷம்: காம்ப்ளானில் நூற்றுக்கணக்கான இறந்த புழுக்கள்- பரிசோதனைக்கு உத்தரவு!!

Read Time:1 Minute, 48 Second

7a386b79-030d-4d76-82f6-be9e9b38ad8d_S_secvpf’நான் வளர்கிறேன் மம்மி’ என்ற விளம்பரம் மூலம் சற்று உயரம் குறைந்த குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி அதன் மூலம் தன் விற்பனையை பெருக்கிக்கொண்ட காம்ப்ளான் சத்து மாவில் நூற்றுக்கணக்கான இறந்த புழுக்கள் இருந்ததால் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு கொடுப்பதற்காக காம்ப்ளான் சத்து மாவை பாலில் கொட்டியுள்ளார். அப்போது வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் நூற்றுக்கணக்கான இறந்த புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக அந்த பெண் கூறும் போது ’பல ஆண்டுகளாகவே காம்ப்ளானை பயன்படுத்தி வருகிறோம். நூற்றுக்கணக்கான புழுக்கள் என்பதால் பார்க்க முடிந்தது. குறைவாக இருந்திருந்தால் எப்படி தெரிந்திருக்கும் .மேகி சாப்பிடுவதை நிறுத்தியதை போல காம்ப்ளான் சத்து மாவு சாப்பிடுவதை நிறுத்த போகிறோம்” என தெரிவித்துள்ளார்.

அந்த பெண்ணின் கணவர் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய கழகத்திடம் புகார் அளித்தன் பெயரில் அந்த காம்ப்ளான் பாக்கெட் பரிசோதனைக்கு அனுப்பபட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என்னால் தாய்க்கும் தாய் நாட்டிற்கும் சேவை செய்யாமல் இருக்க முடியாது என்று மனைவியிடம் கூறிவிட்டேன்: சோம்நாத்!!
Next post பீகார் கல்லூரியில் ஒட்டுமொத்தமாக அமர்ந்து காப்பி அடித்த மாணவிகள் தேர்வு அடியோடு ரத்து!!