நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு இளம்பெண்கள் கடத்தல்: தங்கம் – போலி ரூபாய் நோட்டுகள் கடத்தலும் அதிகரிப்பு!!

Read Time:1 Minute, 53 Second

98997dcf-4528-40d0-b5c2-1095ee06bd09_S_secvpf (1)நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்குள் அதிகளவில் இளம் பெண்கள் கடத்தப்பட்டு வருவதாக சிறப்பு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

எல்லைப் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்ட, சிறப்பு புலனாய்வு அமைப்பின் இயக்குனர் பி.டி.சர்மா இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;

“நேபாளத்தில் இருந்து மனிதக் கடத்தல், குறிப்பாக இளம் பெண்கள் அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றனர். அவ்வாறு கடத்தப்பட்டு வரும் இளம் பெண்களை பாதுகாப்பு படையினர் மீட்டு, தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து வருகின்றனர்.

மனிதக் கடத்தல் மட்டுமல்லாமல், தங்கமும் அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன. 2012 ஆம் ஆண்டு 73 லட்சம் மதிப்புடைய தங்கம் பறி்முதல் செய்யப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் அதன் மதிப்பு 23 கோடி ரூபாய் ஆகும். இதே போல நேபாள எல்லை வழியாக கள்ள நோட்டுகளும் இந்தியாவுக்குள் புழக்கத்தில் விடப்படுகின்றன. 2012 ஆம் ஆண்டு 62 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது போன்ற குற்றங்களை தடுக்க சிறப்பான சட்டங்களை இயற்றுவதோடு, எல்லை பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும்” என்று சர்மா கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2 வயதில் திருமணம் – 13 வயதில் விதவை: ராஜஸ்தான் சிறுமிக்கு நடந்த கொடுமை!!
Next post ஆண் குழந்தைக்காக 15 வருடத்தில் தொடர்ந்து 15 குழந்தைகள் பெற்ற பெண்!!