கிணத்துக்கடவு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கடத்தி குடும்பம் நடத்திய கொள்ளையன் கைது!!

Read Time:4 Minute, 10 Second

1148bb9a-df72-43f1-9605-733eb2965979_S_secvpfகோவை கிணத்துக்கடவை சேர்ந்த தேங்காய் நார் வியாபாரியின் 17 வயது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 7–ந்தேதி மாணவி காணாமல் போய்விட்டார்.

அவரை வியாபாரியிடம் வேலை பார்த்த ஆர்தர்குமார் என்கிற ஆறுமுகம் (வயது 23) என்ற வாலிபர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று விட்டதாக, கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்யப்பட்டது.

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியையும், அவரை கடத்தி சென்ற வாலிபர் ஆறுமுகத்தையும் தேடி வந்தனர். தனிப்படை போலீசார் கடந்த 4 மாதங்களாக பல இடங்களில் தேடினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த கருணாகரன் (33) என்பவர் மோட்டார் சைக்கிளில் கிணத்துக்கடவு வந்த போது, அவரை ஒரு வாலிபர் மறித்தார். தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரம் பணம் மற்றும் கைகடிகாரத்தை பறித்து சென்றார். இது குறித்து கருணாகரன் கிணத்துக்கடவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இரவு போலீசார் கோவில்பாளையம் பகுதியில் ரோந்து சென்ற போது, ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் ஆறுமுகம் என்பதும் கருணாகரனிடம் பணம் மற்றும் கைகடிகாரத்தை வழிப்பறி செய்ததும், மாணவியை கடத்தி திருமணம் செய்ததும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் மாணவியை திருச்சி பகுதியில் உள்ள குலுமணி என்ற இடத்தில் தனியாக வீடு எடுத்து தங்க வைத்து குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அங்கு சென்று மாணவியை மீட்டு வந்ததுடன், அவரை மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கைதான ஆறுமுகம் 17 வயது மாணவியை கடத்தி திருமணம் செய்து கொண்டு, கணவன்– மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஆறுமுகத்துக்கு செலவுக்கு பணம் இல்லாததால், நண்பர்களிடம் பணம் வாங்க கிணத்துக்கடவுக்கு வந்துள்ளார்.

ஆனால் நண்பர்கள் பணம் இல்லை என்று தெரிவித்ததால் கருணாகரனிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். போலீஸ் பிடித்துவிடும் என்பதால் இரவு வரை பதுங்கியிருந்து பின்னர் கோவில்பாளையம் பஸ் நிலையத்தில் திருச்சி செல்ல காத்திருந்த போது சிக்கினார்.

கைது செய்யப்பட்ட ஆறுமுகம் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் மீது நெல்லை தாழையூத்து போலீஸ் நிலையத்தில் 2 கொலை வழக்குகள், கொலை முயற்சி, கொள்ளை வழக்கு உள்பட மொத்தம் 6 வழக்குகள் உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடலூரில் வீட்டு ஜன்னலை பெயர்த்தெடுத்து ரூ.3 லட்சம் நகை–பணம் கொள்ளை!!
Next post தலைவன் பேச்சுக்கு மாத்திரமே பணிவேன் – அநுர!!