எதிர்ப்பை மீறி கள்ளத்தொடர்பு: 17 வயது இளம்பெண்ணின் கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை தலைமறைவு!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் நகரின் அருகாமையில் இருக்கும் அடா கிராமத்தை சேர்ந்தவர் யூசுப் அலி குரேஷி. இவரது மகள் ரபினா(17) என்பவர் தனது வீட்டின் அருகே வசித்துவரும் அஜ்ஜு என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக யூசுப்புக்கு தெரியவந்தது.
இந்த தகாத தொடர்பை கைவிடும்படி ரபினாவிடம் பெற்றோர் வலியுறுத்தி வந்தனர். ஆனால், அவர்களின் எதிர்ப்பை மீறி அந்த தொடர்பு நீடித்து வந்ததை கண்டு ஆத்திரம் அடைந்த யூசுப் அலி குரேஷி, மகளின் நடத்தையால் குடும்ப கவுரவம் சீர்குலைந்துப் போவதை எண்ணி வேதனை அடைந்தார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ரபினாவின் கழுத்தை நெறித்துக் கொன்ற யூசுப், பிணத்தை வீட்டின் அருகாமையில் உள்ள பெரிய கால்வாய்க்குள் தூக்கி எறிந்துவிட்டு, ஏதும் அறியாதவர்போல் இருந்து விட்டார். அவரது குடும்பத்தாரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், அருகாமையில் உள்ள காசியாபாத் மாவட்டத்தின் போஜ்பூர் பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து நேற்று ரபினாவின் பிணத்தை மீட்ட போலீசார், தலைமறைவாக இருக்கும் யூசுப் அலி குரேஷி மற்றும் அவரது குடும்பத்தாரை தேடி வருகின்றனர்.