கோபி அருகே மகன் தற்கொலை செய்த வேதனையில் தாயும் தூக்கு போட்டு சாவு!!

Read Time:1 Minute, 29 Second

5cec7326-19c9-4b5a-953b-dd7c8399d7e3_S_secvpfகோபி அடுத்த கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 40). இவரது கணவர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

இவரது ஒரே மகன் ரஞ்சித்குமார் (14). கடந்த 8 மாதத்துக்கு முன் இவனை ஒழுங்காக பள்ளிக்கு தாய் போகச்சொல்லி திட்டியதால் ரஞ்சித்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கெண்டான்.

கணவனும் ஏற்கனவே இறந்து விட்டார். மகனும் தற்கொலை செய்து கொண்டான் என்ற மன வேதனையில் பழனியம்மாள் காணப்பட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் பழனியம்மாள் தனது சேலையால் தூக்கு போட்டு கொண்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் பழனியம்மாளை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9 மணி அளவில் பழனியம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிகாரிகள் சோதனையில் 250 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்!!
Next post செங்குன்றம் நில புரோக்கர் கொலை: ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 6 பேர் கைது!!