இந்தியாவில் 14 கோடி பேர் இணைய தளத்தில் இணைந்தனர்: 61 சதவீதம் பேர் செல்போனில் பயன்படுத்துகிறார்கள்!!

Read Time:2 Minute, 55 Second

ff78f606-a953-4ef9-926f-d9491981523e_S_secvpfஇந்தியாவில் இணைய தளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கணக்கெடுப்பின்படி 14.3 கோடி பேர் இணைய தளம் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.
கிராமங்களில் இணைய தளம் பயன்பாடு இருமடங்கு அதிகரித்து உள்ளது. இது 100 சதவீத அதிகரிப்பு ஆகும். அவர்கள் இணைய தளம் மூலம் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர்களிலும் வாட்ஸ்-அப் போன்றவற்றிலும் உள்ளனர்.

நகர்ப்பகுதியில் மட்டும் 11.8 கோடி பேர் இணைய தளத்தில் உள்ளனர். இணையதள பயன்பாடு நகர்ப்பகுதியில் 35 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

கிராமங்களில் இணைய தள பயன்பாடு 1.2 கோடியில் இருந்து 2.5 கோடியாக அதிகரித்து உள்ளது. இது 100 சதவீதம் வளர்ச்சி ஆகும்.

நகர்பகுதியில் இணைய தளத்தில் இருப்பவர்களில் 96 சதவீதம் பேர் பேஸ்புக்கில் இணைந்துள்ளனர். இவர்களில் 34 சதவீதம் பேர் கல்லூரி மாணவர்கள், 27 சதவீதம் பேர் இளைஞர்கள், 12 சதவீதம் பேர் பள்ளி செல்லும் மாணவர்கள்.

இதற்கு காரணம் செல்போன்கள் தான். இதற்கு முன்பு கம்ப்யூட்டர்களில் மட்டுமே இணைய தளம் பயன்படுத்தும் நிலை இருந்தது. தற்போது இணைய தளம் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் போன்கள் குறைந்த விலைக்கு வந்து விட்டன. அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன்கள் சர்வ சாதாரணமாக தவழ்கிறது. அவர்கள் பயன்பாட்டுக்கு தக்கவாறு இணைய தள இணைப்பு பெறுகிறார்கள்.

எனவேதான் ஸ்மார்ட் போன்கள் மூலம் ஏராளமானோர் இணைய தளத்தில் இணைந்துள்ளனர். நிறைய பேர் பேஸ்புக், டுவிட்டரை பயன்படுத்துவதற்காக இணைய தள இணைப்பு பெறுகிறார்கள்.

செல்போன்கள் மூலம் 61 சதவீதம் பேர் இணைய தளம் பெற்று டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இணைந்துள்ளனர்.

இதனால் புதிது புதிதாக இணைய தளங்கள் தோன்றிக்கொண்டு இருக்கின்றன. இதன் மூலம் ஆன்லைன் வியாபாரமும் பெருகி விட்டது. மக்கள் கடைகளுக்கும் நிறுவனங்களுக்கும் செல்லாமல் வீட்டில் இருந்தவாரே பொருட்களை பெறும் நிலை உருவாகி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோர்ட் கட்டிடத்தின் உச்சியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த மனநோயாளி!!
Next post தமிழக–ஆந்திர எல்லையில் போலீசார் சாராய வேட்டை!!