மியன்மாரில் இராணுவ ஆட்சியாளர்களின் பிரதிநிதி ஆங்-சாங்-சூ கியுடன் முதற்தடவையாக சந்திப்பு

Read Time:2 Minute, 30 Second

மியன்மாரின் எதிர்க்கட்சித் தலைவி ஆங்-சாங்-சூ கியுடன் பேச்சுகளை மேற்கொள்வதற்காக இராணுவ ஆட்சியாளர்களினால் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரியுடன் சூ கி முதற்தடவையாக சந்திப்புகளை நடத்தியுள்ளார். இச்சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச அழுத்தங்களின் விளைவாக சூ கியுடன் பேச்சுகளை மேற்கொள்வதற்காக ஆங் சாங் சூகி இம்மாத முற்பகுதியில் இராணுவ ஆட்சியாளர்களினால் நியமிக்கப்பட்டார். இராணுவ ஆட்சியாளர்களுக்கும் சூ கிக்குமிடையில் சந்திப்புகளை ஏற்படுத்துவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் எவ்வித முன்னேற்றமும் அடையப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் அங்கு நடைபெற்ற அமைதி ஆர்ப்பாட்டங்களின் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டதைத் தொடர்ந்து மியன்மாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர் இப்ராகிம் கம்பாறி சூ கியுடன் பேச்சுகளை மேற்கொள்வதற்கு பிரதிநிதியொருவரை நியமிக்குமாறு வலியுறுத்தியதைத் தொடர்ந்து சூ கியுடன் பேச்சுகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இராணுவ ஆட்சியாளர்களினால் நியமிக்கப்பட்ட ஆங் சாங் சூகி வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் நெகிழ்வுப் போக்குடைய ஓர் நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, மியன்மாரின் மீது மேலதிக அழுத்தங்களை விதிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர் இப்ராகிம் கம்பாறி சீனாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சூரியன் எவ்.எம். உட்பட 5 வானொலி நிலையங்களின் அனுமதி ரத்து செய்யப்பட்டதற்கு ஊடக அமைப்புகள் கடும் கண்டனம்
Next post மலையாளத்தில் மொழிபெயர்க்கப்படும் கமல்ஹாசன் திரைக்கதைகள்